Skip to main content

நாங்கள்_ஆசிரியர்கள்

போராடும் ஆசிரியர்களுக்கான இன்னொரு #பரிமாணம்...

அரசு ஊழியர்களை வேலையை நீக்கிவிட்டு அந்த வேலையை எங்களுக்குத் தாருங்கள்.

என்னவொரு பண்பான வேண்டுகோள்!.

நியாயமாக இத்தனைக் காலமாய் வேலையின்றி இருக்கிறோமே  என நீங்கள் அரசாங்கத்திற்கு எதிராகத்தானே கோபப்பட்டிருக்க வேண்டும்?  அதைவிடுத்து அடுத்தவர் வேலையைப் பறித்து விட்டு எனக்கு அந்த வேலை கொடுங்கள் என உங்களைப் பேச வைத்திருக்கிறது இந்த அரசு..

போராட்டத்தின் உண்மை நிலை என்னவென்றே தெரியாமல் போராட்டம் என்றால் சம்பள உயர்வுக்காகத்தான் என முடிவெடுக்கும் உங்கள் மூளையை அரசு ஊழியர்களுக்கு அதுவும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் ஊடகங்கள் மற்றும் அரசின் நோக்கம் வெற்றியடைந்து உள்ளதோவெனத் தோன்றுகிறது.

ஆனால் எங்கள் நோக்கம் எம்மிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல; எங்களை ஏசி வசைபாடும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தான் என்பதை மறந்து விடாதீர்கள். நாளை எங்களை வசைபாடும் உங்கள் பிள்ளைகள் அரசுப்பணிக்கு வரக்கூடும். தனது சம்பளத்திலிருது சிறுகச் சிறுக, தான் ஓய்வடைந்தாலோ இறந்து போனாலோ எனது குடும்பத்திற்கு உதவும் என அவர்கள் சேமித்த தொகை  அவர்கள் இறந்தபின்னும் அல்லது ஓய்வடைந்தபின்னும் கிடைக்காமல்  சீட்டுக்கம்பனியில்  போட்ட பணமாய்ப் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?

கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார்  என்பதாக அமைச்சர்கள் கூறும் பொய்களைபோலவே  2% சதவிகித ஊழியர்கள் 49% நிதிச்செலவு என சம்பளத்துக்காகவே செலவிடுவதாகக் கூறும் பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்..

நாங்கள்  சுமார் 35% ஆக இருக்கிறோம். அதில் கல்விக்கான ஒதுக்கீடு என்பது ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் இல்லை. உயர்கல்வி, தொடக்கக்கல்வி, கல்விசார்ந்த பணிகள், அணைவருக்கும் கல்வி இயக்கம், சமூகநலத்துறை பள்ளிகள்  என அனைத்திற்குமானதுதான்.  பள்ளிக்கட்டிடங்களின்  உள், வெளி கட்டமைப்புகள், தளவாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி, புத்தகம், குறிப்பேடுகள், காலணிகள் மற்றும் இதர பொருட்கள், இவற்றோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் என அணைத்தையும் உள்ளிட்டதுதான்...

அரசு ஊழியர்களாகிய நாங்கள் இல்லையேல் அரசாங்க இயந்திரம் தானாக இயங்காது.  உங்களின் குடும்ப , வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, தேர்தல் பணிகள், வரி விவகாரங்கள், வட்ட வழங்கல் விவகாரங்கள், கல்விப்பணி  மற்றும் சில சேவைப்பணிகள் என அனைத்தும் அரசு ஊழியர்களால் தான் நடக்கிறது.. ( இன்று வேலை கேட்கும் நீங்கள் நாங்கள் பராமரிக்கும  பதிவேடுகளையும் அதிகாரிகள்  தரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் மனவுளைச்சலுக்கு ஆளாகும் நிலையையும் கண்டால் வேலையே வேண்டாம் என ஓடிவிடுவீர்கள்)  யாருக்கும்  சம்பளம் இலவசமாக வழங்கப்படுவதில்லை.. 

ஜல்லிக்கட்டு,  விவசாயம், குடிநீர் சுகாதாரம் என மக்களின்  உரிமைகள் அணைத்திற்கும் போராடினால்தான் நியாயம் கிடைக்கும்  என்பதான நிலையை  அரசுகள் உருவாக்கிவிட்டன..அதுபோலத்தான் எங்கள்  உரிமைகளுக்காகத்தான் நாங்களும் போராடுகிறோம்..  அதுவும் போராட்டகாலத்திற்கு ஊதியம் கிடையாது எனத்தெரிந்தே போராடுகிறோம்.

எங்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு உங்களை பணியமர்த்தக் கோருகிறீர்கள். சரி. எங்களை தகுதிமாற்றி அங்கன்வாடி மையங்களில் பணிபுரிய வைக்கிறது அரசு. இந்தப் பணியிடங்களை உங்களுக்குக் கேளுங்கள், சிறப்புப் பயிற்சியுடன் பணியில் அமருங்கள், பள்ளிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் இன்னும் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாடாமலே உள்ளது. அந்த பணியிடங்களை  உங்களுக்குக் கேளுங்கள்,  அதை விடுத்து ஆசிரியர்கள் மேல் நீங்கள் காட்டும் காழ்ப்புணர்ச்சி உங்கள் அறிவாற்றலை வெளிப்படையாகக் காட்டிவிடவில்லையா?

உச்சமாக ஒருவர் நீங்கள் எருமை மாடு மேய்க்கப் போகலாம் எனப் பதிவிடுகிறார். அடிப்படை உரிமைகளையும் , வரலாற்றையும், அரசியலமைப்பையும்,  அறிவையும் சரியாய்ப் போதிக்காமல் எருமையாய்  வளர்த்த பெற்றோர்கள் மீதும், அந்த எருமையைச் சரியாய் மேய்க்காத உங்கள் ஆசிரியர் மீதும் கோபம்தான் வருகிறது.

மற்றபடி அவரவர் படிப்புக்கான தகுதிக்கான வேலையை அரசாங்கத்திடம் கேளுங்கள். நீங்களும் போராடுங்கள்.  வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். ஒவ்வொரு விதத்திலும் அனைவருக்கும்...

🔮ஆசிரியர்கள் அரசுஊழியர்கள் போராட்டத்தை விமர்சிப்பவர்களே.

🔮இதை கேளுங்கள்.

🙀நாங்கள் கட்டிய *50ஆயிரம் கோடி ரூபாய்* CPS என்ற பெயரில் அரசு பிடித்ததே..

🙀அதை எங்கே என்று கேட்கிறோம் அரசிடம்..

பதிலில்லை..

🙀நிதிநிறுவனங்கள் மோசடி செய்தால் அந்த கம்பெனி முன்நின்று பணமிழந்தவன் கல்லெறிவானே..

அதுபோன்று நாங்கள் செய்தோமா??

அறவழியில்தானே போராடுகிறோம்..

🔮ஆளுக்கோரு ஊதியம் என்ற பெயரில் உள்ள ஊதியமுரண்பாடுகளை களையுங்கள் என்கிறோம்..

இது தவறா?

🔮ஒரு எம்எல்ஏ பதவியேற்று பத்து நிமிடத்தில் செத்து போனால் அவருக்கு பென்சன் உண்டு..

🙀ஆனால் 32வருடங்கள் வேலை பார்த்த ஒரு ஆசிரியனுக்கு பென்சன் கிடையாது..

🙀கடைசிக்காலத்தில் சாக்பீஸ் துகளோடு அவன் வாழ்வு அஸ்தமிக்கவேண்டும்..

👉🏻ஆசிரியருக்கு சம்பளம் அதிகம் என கூச்சலிடுபவர்களே..

👉🏻லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்று சிலர் எழுத்தால் எழுதலாம் அதை மனத்தால் கொண்டவர்கள் நாங்கள்..

👉🏻எங்கள் ஊதியம் உடனே உயர்ந்து விடவில்லை..

👉🏻20வருடம் வேலை பார்த்த என் சம்பளம் இப்போது 70000.

🙀ஆரம்பகாலத்தில் 5789 தான்..

🙀இதில் வருமானவரிக்காக ஒருமாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும்..

👉🏻👉🏻சட்டப்பிரிவு 51 100 101ஆகிய பிரிவுகளை நீக்க சொல்கிறோம்.

இவை என்ன தெரியுமா?

கூச்சலிடுபவர்களே !!

🙀இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சட்டப்பிரிவுகள்.
இதை நீக்கு என முழக்கமிடுகிறோம்..

😡ஆனால் நீங்களோ 5000ரூபாய்க்கு பாடம் நடத்த ஆள் தேடுகிறீர்கள்..

👉🏻ஜெயலலிதா கூறிய அதே வார்த்தைகளை 90சதவீதம் அரசுப்பணம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு செல்கிறது என்பதை நம்புகிறவர்களே..

🙀அப்படியானால் அரசியல்வாதிகள் கொள்ளையடித்த கோடிகக்கணக்கான பணங்கள் அரசு பணமில்லையா??

🙀அது விளையாட்டுக்காக சின்னபிள்ளைகள் வைத்திருக்கும் பணமா??

👉🏻👉🏻இன்று நீ முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் எழுத்துக்களை தட்டச்சு செய்கிறாயே

👉🏻👉🏻அவதூறாய் பேசுகிறாயே

👉🏻👉🏻அந்த எழுத்துக்களை கற்றுக்கொடுத்தவன் ஒரு ஆசிரியன் என்பதை மறவாதே..

👉🏻👉🏻பின்லாந்து கல்விமுறையை சிலாகிப்பவனே

👉🏻👉🏻அங்கே ஆசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள்..

👎🏻இங்கே ????????

👉🏻👉🏻ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறோம் என்பது பொய்..

👉🏻👉🏻மேலே சொன்னவைதான் மெய்..

🙏🏻புரியவில்லையெனில் போராட்ட களம் வா..

👉🏻அங்கே உனக்கு நாங்கள் கற்றுதருகிறோம்..

ஏனென்றால்

*நாங்கள்_ஆசிரியர்கள்*

மறு பதிப்பு.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...