Skip to main content

TODAY'S THOUGHT..

முதுமை + தனிமை =
             *கொடுமை*

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*

*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*
நமக்கு தேவைப்படும் நேரத்தில்,
*பீக் hour சார்ஜ்*
போட்டு களைப்படைய
செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...*
என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*)
*வாழ்கிறேன்!*

🤔🤭🤫😰😥😓😦😪

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*

🌱🎋🌳🌹🌸🥀🌻🙏

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning ano sis and friends

    ReplyDelete
  3. Ano mam pg Ku pta molama fill panna go poturukanga apa inoru list varuma mam

    ReplyDelete
    Replies
    1. Sir/Mam..

      List vara poguthunu dhan sonanga, but TRB neriya issues la maatikitadhala ipothaiku temporary ah adha stop panitadha solranga. Because adhukum neriya per panam kuduthrukanga adhan unma.

      Second list vandhapo kuda indha issue irundhuchu, but idhukum PTA appointment kum samantham ila, vacancies iruku kandippa exam kum chances iruku. So least la miss panavanga thavira elarum padikradhu naladhu..

      Delete
    2. Thanks for your info mam

      Delete
    3. Thanks a lot for your patience mam..

      Delete
  4. Ano. Sis Tet., trt. Exam ஏதேனும் தகவல் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. Sis, edhavadhu thagaval kedacha kandippa solraen sis.. But exam kandippa varum..

      Delete
  5. Apo Feb month vara pg, tet posting ethuvum illana ninaiken go la apd thane mention panni ruckus September to February vara contract basis

    ReplyDelete
  6. தமிழகத்தில் 82 ஆயிரம் ஆசிரியர்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதி ேதர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசு பள்ளிகளில் காலி பணியிடம் இல்லாததால் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் இருக்கிறார்கள்*


    *இனிமேல் அந்த நிலை இருக்கக்கூடாது என்ற நிலையில்தான் 2013ல் இருந்த ஆசிரியர்களுக்கும் இப்போது இருக்கும் ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் என்ற முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதை நாங்கள் வாபஸ் பெற்றிருக்கிறோம்*


    *அன்றைய மதிப்பெண் வேறு, இன்றைய மதிப்பெண் வேறு. இதை மாற்றி அமைத்ததற்கு பிறகு அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் எவ்வளவு என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்*


    *அந்த காலி பணியிடங்களுக்கு ஏற்ப அரசு தேர்வாணையம் மூலம் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


    ReplyDelete
  7. Ⓜ‌🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌ 🇳‌🇪‌🇼‌🇸‌

    *💢✍✍✍💢1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு*

    *1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு*

    *☲☲☲☲☲☲®☲☲☲☲☲☲*

    *🌈⚡மின்னல் செய்தி🌈⚡*
    *👉🏽நேரலை👈🏽*

    ReplyDelete
  8. PTA la yapadi join panrathu pls guide me

    ReplyDelete
  9. PTA la yapadi join panrathu pls guide me

    ReplyDelete
  10. Y... Comment publish aagala

    ReplyDelete
  11. hi ano sis...gd eve...hw r u???

    ReplyDelete
    Replies
    1. Hi Radhika sis..

      Gudevng, am doing gud.. How abt u?

      Delete
  12. இந்த அரசு நம்மள மென்டல் ஆகிடுவாங்க போல. இறைவா ...... . .........

    ReplyDelete
  13. PTA vazhiya yapady join panrpanr yaaravathu sollunga

    ReplyDelete
  14. PTA vazhiya yapadi join pannanum frnds pls someone guide me

    ReplyDelete
  15. Ano mam Unga frnds question ketta matum thaan ans pannuvingala...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here