அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்..கவலைப்படாமல் வாருங்கள்! ---'வாலி'
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மகன் திரும்பிவர அருளிய மகாபெரியவா
வழி காட்டியவர்-கடைசிப் பாரா பாருங்கள்.
நன்றி-குமுதம் லைஃப்-19-09-2018 தேதியிட்டது
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தொகுப்பு-நாககுமாரி
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
(இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!)
இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.
துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.. அவர்களுக்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார்.(கையறு) அப்போது அவருக்கு ஆறுதலும்,தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர்.
"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார்.
மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம்,திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர்
மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார்..
மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே...ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள்.
வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும்
......கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார்.
அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை,பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது.
ஹிப்பிகளோடு சேர்ந்துவிட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான்.
கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார்,தாய்.
"இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன்.
மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர..'!
இன்னொரு முக்கியமான விஷயம். திருமதி கே.வி.எம். அவர்களிடம், 'காஞ்சி மகானை தரிசித்தால் பிரச்னை கண்டிப்பாகத் தீரும்' என்று ஆலோசனை சொன்னவர் யார் தெரியுமா?
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGudmrng ano sis..exam news ethum iruka sis..
ReplyDeleteGudmrng shuba sis..
DeleteAm expecting some news by evening sis, if there's anything will update here..
Good morning ano sis and friends
ReplyDeleteGudmrng Revathi sis.. :)
DeleteGoodmorning ano mam and puthagasalai friends
ReplyDeleteGudmrng Prakash sir..
DeleteAno mam government reexam vaikara mathiri thariyavillai.
ReplyDeleteIla Prakash sir, avanga neriya problems la maatikitu irukadhala process elam delay aguthu.. Namma neram apdi iruku..
Deleteகாலை வணக்கம், சகோதரி மற்றும் நண்பர்கள்.
ReplyDeleteKaalai Vanakkam Sagothararey..
DeleteAno mam 2017 tet exam problem entha alavuku iruku mam.
ReplyDeleteNa pass pannathe antha oru examthan mam.
Veera sir..
DeleteCase elam next hearing varapo dha status theriyum nu solranga sir, trt ku kuda case irukadhala next move pathutu dhan decision edupanganu solranga..
Pg ku oru list varumnu info irundhuchu, last list la kuda edho corruption nadanthanala ipo indha list kuda delay agalamnu pesikranga..
Aga motham TRB asusual onnum panama namma elarayum vechu senjutu irukanga..
If possible elarum again TRB ku call pana start panunga..
Any new news about pg trb exam or pg list ano mam
ReplyDeleteInoru list Indha month end kula varumnu sonanga, ipo trb iruka situation sari iladha kaaranathala may be delay agalam..
DeleteBut pg syllabus padikrathu nalladhu..
Thank you for your info mam
DeleteAnon mam one week kulla nenga unga frds kitta kettu sollunga mam plz. Exam varuma varatha, enaku manasuku romba kastama iruku,
ReplyDeleteAnon mam nenga unga frds kitta kettu sollunga TRT exam varuma,varatha, nan romba kavalaiyoda iruken. Suicide panalamnu thonudhu plz.
ReplyDeleteRaja sir..
DeleteIpdilam yosikathinga please, trb yoda mudiyara vishayam ila life.. Kandippa exam varum, neenga padinga, pg, trt edhu vandhalum padikradhu waste agathu..
Endha thagaval kedachalum udaney soluvaen sir..
நண்பரே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் வெயிட்டேஜ் தவறு என்று சொல்லி கொண்டே 4 வருடத்தை வீண்ணாக்கி விட்டார்கள். உச்ச நீதிமன்றம் வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்ய சொல்லி 2017 தேர்வு நடத்தபட்டது. ஆனால் மறுபடியும் வெயிட்டேஜ் எதிர்ப்பு என்று சொல்லி ஒரு கூட்டம் இப்போது 14 மாதம் வரை வீணடித்து விட்டது. இப்போது போட்டி தேர்வில் பணம் கொடுத்து வேலை வாங்க பலர் துடிக்கின்றனர். எனவே தான் trb மீது இவ்வளவு முறைகேடு புகார்கள். வெயிட்டேஜ் எதிர்ப்பு என்ற பெயரில் பலரின் வாழ்க்கையை கெடுக்கின்றனர். எனவே இதை புரிந்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தை விட்டு விடுங்கள்
Delete