Skip to main content

படித்ததில் பிடித்தது..

ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...
🤔🤔🤔
*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*
☺😟😏
*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*
😔😒😞
*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*
😪😥😰
*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*
😣😖🙁
*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*
😠😡☹
*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*
🙂😊🤗
*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*
☺☺☺
*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*
*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*
😨😱😀
*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*
🤗🤗🤗🤗🤗🤗

*இன்றைய ஆரோக்கிய தகவல்.,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Gudmrng ano sis..nice lines.

    ReplyDelete
  3. *MINNAL KALVISEITHI 15 GROUPS*

    *WHATSAPP NUMBER 6380815982*


    *Ⓜ🔰🔰அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அட்டவணை*


    *அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள துணைப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது*


    *அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள துணைப் பேராசிரியர் மற்றும் புகுமுக சட்டப் படிப்புக்கான துணைப் பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்தி நேரடியாக நியமனம் செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது*


    *போட்டித் தேர்வுகள் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது*


    *அடுத்து, புகுமுக சட்டப் படிப்புக்கான துணைப் பேராசிரியர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் அக்டோபர் 13ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடக்கிறது. இந்த போட்டித் தேர்வில் அரசியல் அறிவியல், பொருளியல், ஆங்கிலம், சமூகவியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 5 நாட்கள் தேர்வு நடக்கும்*


    *SOURCE DINAKARAN WEBSITE*

    *மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து 6380815982 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பவும்.*
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    *⚡மின்னல் கல்விச்செய்தி⚡*

    ♈♈♈♈♈♈♈♈♈♈

    ReplyDelete
  4. Good morning ano sis and friends

    ReplyDelete
  5. Good morning, sister and friends.

    ReplyDelete
  6. Good evening friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    And all the friends in this blog

    ReplyDelete
    Replies
    1. மாலை வணக்கம் பானு அவர்களே

      Delete
  7. Enga friends yaaraiyum roomba naala kanom

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...