Skip to main content

இயல்பா இருங்க..

அதிக விஷயம்... விஷம்.
--------------------------------------
சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர். படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

இனிப்பை தொட்டுவிடாதீர்கள்
அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.
நடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..

காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்
பால் வேண்டாம்
ஐஸ் வாட்டர் வேண்டாம்
பாட்டில் ஜீஸ் வேண்டாம்
என்றார்கள்... சரி என்று
பழகினேன்..

ஒன்று புரிந்தது.
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து, அதிகமாக தெரிந்தாலும்
ஆபத்து என்று.

Over qualification is disqualification
என்று எங்கோ படித்த நினைவு

Too much informations will make you to suffer from distinguishing between useful And useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை,
வாழை இலையில் விழுந்த
ரசம் போல,
எந்தப் பக்கம் ஓடுது என்றே
தெரியாமல் ஓடுகிறது.

வாழ்க்கை ரசத்தை
குடிக்க முடியலையே?

அதிக விஷயம், விஷம்.

இயல்பா இருங்க.

**வாழ்க்கை யாத்திரை
சுகமான நித்திரையோட
மாத்திரை இல்லாத
யாத்திரையாக வாழ்த்துகள்.**

வெற்றி நிச்சயம்....👍👍

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed sunday..

    ReplyDelete
  2. Good morning ano mam sunder sir Abdul sir and all my friends 🌺🌺🌺

    ReplyDelete
  3. Good morning, sister and friends.

    ReplyDelete
  4. Good morning Ano sis
    Abdul bro
    Sunder bro
    Have a nice day

    ReplyDelete
  5. Gud mrng ano mam
    Banu sis
    Santhi sis
    Sunder bro
    Abdul bro
    Arul bro
    Fathima sis n all frnds...

    Happy Rakshabandhan toAbdul bro,sunder bro,arul bro n all brothers in this blog...

    ReplyDelete
    Replies
    1. சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவத்தைப் போற்றும் புனித நாள் இன்று..!
      சகோதர, சகோதரிகள் அனைத்து உறவுகளுக்கும் ரக்க்ஷா_பந்தன் நல்வாழ்த்துக்கள்.!
      My special wish To
      Ramya sis
      Rekha sis
      Sathya sis
      Santhi sis
      Banu sis...!💐💐💐🤝

      Delete
    2. Good evening sunder brother, happy raksha bhanthan wish to sunder brother, arul anna, abdul sir& frds

      Delete
    3. Thank u sunder bro..
      Gudevng ramya sis,sunder bro..

      Delete
  6. Gd mng ano mam and all of u in this blog

    ReplyDelete
  7. Thoongum pothu nan ennamo mallaakka olungaa than padukkuren but morning elunthirukkum pothu Kuppura paduthu kidakken...!!! :)
    thookkathula ennalaamo nadakkuthu.....!!!
    😂😂😥

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..