Skip to main content

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க, ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது.பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...