சென்னை: &'மாணவர்களின், உளவியல் நலனை உறுதிப்படுத்துவதற்கான குழுவை அமைக்கத் தவறினால், பள்ளிக்கல்வி துறை செயலர் ஆஜராக வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவியை தவறாக திட்டி, ஆசிரியர் ஒருவர் அடித்துள்ளார். இதற்கு தண்டனையாக அவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை, பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்தது. இதை, ரத்து செய்யக்கோரி, சம்மந்தப்பட்ட ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.தீர்ப்புஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முரளிதரன், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்கும்போது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் தொடர் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சிறந்த கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் அடங்கிய குழுவையும், பள்ளிக்கல்வித்துறை செயலர் அமைக்க வேண்டும்.பள்ளிகளில் உளவியல் ரீதியாக, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, இந்தக் குழு மதிப்பீடு செய்ய வேண்டும். புத்தாக்க பயிற்சிபள்ளிகளில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
மாணவர்களை எவ்வாறு சிறப்பாக கையாள வேண்டும் என, ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, ஜூன், 4 வரை, அவகாசம் அளித்து, நீதிபதி, முரளிதரன் உத்தரவிட்டார். &'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், பள்ளிக் கல்வி செயலர், இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர், ஜூன், 5ல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்&' எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.
சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
Comments
Post a Comment