யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசின் சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது, தற்போது இதில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளப் போகு தேர்வர்களின் இறுதி பெயர் பட்டியில் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 32 மாணவர்கள் ‘அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை’ சேர்ந்தவர்கள்.
இதில் இந்தியா அளவில் 29வது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன். இவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விருப்பப் படமாக தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடம்பிடித்து, தமிழக அளவில் 2ம் இடம் பிடித்த மதுபாலன் என்பவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை சேர்ந்தவர்.
மேலும் தமிழிலேயே தேர்வை எழுதியவர்கள், முதல் நிலை தேர்வு தொடங்கி நேர்முகத் தேர்வு வரை அனைத்தையும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் முடித்தவர்கள், பணியில் இருந்துகொண்டே படித்தவர், வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிக் கொண்டே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று படித்தவர்கள், கடுமையான ஏழ்மைச் சூழலில் இருந்து வந்தவர்கள் என பலதரப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இம்முறை வெற்றி கிடைத்துள்ளது.
அறம் அகாடெமியில் படித்து 356வது இடம் பிடித்துள்ள ஸ்ருதி ஸ்ரீனிவாசன் கூறுகையில்: “சட்டப்படிப்பில் இளங்கலை முடித்து நேரடியாக அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயிற்சி எடுத்தேன். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்திலும் இவர்களது வழிகாட்டுதலிலேயே சுலபமாக வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடினமாக உழைத்து இம்முறை இந்திய வருவாய்த் துறை பணிக்குத் தேர்வாகியுள்ள மோகன பிரியா கூறுகையில் “சில ஆண்டுகளாகவே கடனமாக தேர்விற்கென்று தயாராகி வந்தேன். சென்ற ஆண்டு நேர்முகத் தேர்வின் இறுதி முடிவில் என் பெயர் இல்லாத போது மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதிலிருந்து என்னைத் தேற்றி அடுத்த ஆண்டு மீண்டும் பயிற்சியளித்து என்னை வெற்றி பெறச் செய்த அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமிக்கு நன்றிகள்” என்றார்.
60க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இந்த ஆண்டும் தமிழகம் உருவாக்கி பெருமை அடைகிறது. இதனால் மாணவர்களிடையே இத்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் என்பதில் ஐயம் ஏது இல்லை.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment