சென்னை: &'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், தற்போது, எந்த மாற்றமும் மேற்கொள்ள தேவையில்லை&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, ராமபூபதி தாக்கல் செய்த மனு: என் தந்தை, சுதந்திர போராட்ட வீரர்; தமிழ் ஆசிரியர். தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தை கவுரவப்படுத்தும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளது. ஆனால், இந்த பாடலில் சில வரிகளை, 1967ல், எடுத்து விட்டனர். முதலில் எழுதப்பட்ட முழுமையான பாடல் பற்றி, தற்போதைய தலைமுறையினருக்கு தெரியவில்லை.வரிகள் நீக்கப்படாத முழுமையான பாடல், அற்புதமாக இருக்கும்; ஆட்சேபனைக்குரிய வரிகள் எதுவும் இல்லை. அதில், எந்த மாற்றமும் செய்து இருக்க வேண்டியதில்லை.
எனவே, தமிழ்த்தாய் வாழ்த்து, அசல் பாடலில் மாற்றம் செய்தது, தேவையற்றது. எனவே, அசல் பாடலை அதிகார பூர்வமாக அறிவிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதிகள், மணிக்குமார், பவானி சுப்பராயன் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' அளித்த உத்தரவில், &'தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவராலும் பாடப்பட்டு வருகிறது.
&'நீண்ட காலத்துக்கு பின், தற்போது, அதில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது&' என, கூறப்பட்டுள்ளது. &'சமூகத்தில் நிலவும் அமைதிக்கு, இடையூறு ஏற்படுத்தக் கூடாது&' எனவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Comments
Post a Comment