Skip to main content

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்..
பயம், அதனால் ஏற்படும் கவலைகளும் உணர்வுகளும் நமது பாதையை மறைக்கும்..
பயத்தை உடைக்கும் ஆற்றலை வளர்த்து கொள்வதே வெற்றிக்கு சிறந்த வழி..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good morning ano sis and nabu brother.

      Delete
    2. Gudmrng nabu brother.. How are you.. Hope everything fine with u..☺👍

      Delete
    3. Thank you sister
      aanal kaaththirunthu kaalankal pokuthu Ano sister

      i am good Ano sister
      how you sister

      Delete
    4. Very good morning Revathi sister

      Delete
    5. Nabu brother..

      Kavalai vendam.. Polytechnic madhiri agama irukunu oru vagaila santhosa padunga.. Seekiram naladhu nadakkum brother..

      Delete
  2. Good morning, sister and friends.

    ReplyDelete
  3. The Pictures express more meaning than the words in the Picture
    Nice Picture
    Good Morning to all.

    ReplyDelete
  4. Gud mrng Ano n all viewers 😇

    ReplyDelete
  5. Good morning puthagasalai

    ReplyDelete
  6. Brte to bt transfer திடீரென முடிவு செய்யப்பட்டதால் BT போஸ்டிங் போட தாமதம் எனவும், இன்னும் சிலர் BT to BRTE மாறுதலுக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு அறிவிப்பு வருவது என்பது june மாதம் வரலாம் மற்றும் காலி பணியிடங்கள் 4000 to 5000 இருக்கலாம் எனவும் எனது நண்பருக்கு ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக கிடைத்த தகவல்..Sis இது எனக்கு கிடைத்த தகவல்.. சொன்ன நண்பர் நம்பிக்கைக்கு உரியவர்..

    ReplyDelete
    Replies
    1. Thanks for the info brother.. BRTE ku apuram dha BT posting apdingrathu unmai dha brother..

      Delete
  7. 16.2.2018 bt vacancy 2529 cm cell reply

    ReplyDelete
  8. 16.2.2018 bt vacancy 2529 cm cell reply

    ReplyDelete
  9. Subject vice sollunga jothilakshmi mam plz

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Posting June tha erukkum sir... Ivanunga may month salary summa yan kudukkanum nu neanaipaanunga😠

    ReplyDelete
  12. அரசு சம்பளம் பற்றிய எல்லாம் யோசிக்க மாட்டார்கள் அந்த ஒரு மாதகாலத்தில் புதியதாக பணி நியமனம் பெறுபவர்களை கொண்டு எத்தனையோ வேலைகளை செய்து கொள்ளுவார்கள்

    அரசு நினைத்தால் பணி நியமனம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் காலதாமதத்திற்கு தானெ காரணமெ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. Avanga pathaviya kaapathikka theevirama try panranga adhan delay ku reason..

      Delete
    2. Konjam kuda manasatchiyea illadha govt.....

      Delete
  13. Ivargal posting poduvadupol theriyavillai.irukum vacant 2000+. may month vandhuvittal 50% promotion 1000 post and deployment 500+ post nirappivitu nammai ematrappogirargal.yearly students strength decrease agiradhu.indha reason vaithu nammai veruppetrugirargal.unmayil strength kuraiya posting podathadhe reason.but enna seivadhu nalla govt.posting poda viruppam illadha govi etharku exam vaika vendum.ellam nammidam 500 vasulikka.
    Nanbargale idhu en own opinion. Posting poduvargal endru nambikkondu iruppadai vida veru exam prepare pannalam.

    ReplyDelete
  14. Pg trb exam vara poratha soldrnga apadi vandha epadi ano mam pg next list varum... Orey confusion ah iruku ..

    ReplyDelete
    Replies
    1. Avangaley confusion la dha irukanga vinoth sir..

      Delete
    2. 😂😁😁😁😁😁

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..