Skip to main content

சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 9 நாட்களில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

இந்தியாவை போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் நமக்கு முன்னதாக, 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது. 1960 தொடக்கத்தில் அங்கு ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சி உருவானது. ஆசாத் கடும் அடக்குமுறையை கையாண்டார். ஆட்சிக்கு எதிரான கலகக்குரல்கள்இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஆசாத்தோ ஷியா பிரிவை சேர்ந்தவர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி இனத்தினர் இருந்தனர். 1998இல் ஆசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆசாத்தின் மூத்த மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் பதவி ஏற்க சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஆசாத் 2000ல் மரணம் அடைந்தார். மகன் பஷர் அல் ஆசாத் வசம் ஆட்சி வந்தது. படித்தவர் என்றாலும் அவருக்கு ஆட்சி குறித்து எதுவும் தெரியாது. இந்த நிலையில் சன்னி - ஷியா பிரச்னை உலகம் முழுவதும் பெரிய அளவில் உருவானதுந. இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி அகற்றப்பட்டனர்.

பஷர் ஆசாத்தின் 18 ஆண்டு ஆட்சி முழுவதும் ரத்தக்களரியாகத்தான் உள்ளது. வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை. இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது.ரஷ்யா மற்றும் சில நாடுகள் அதிபருக்கு உதவியாகவும் துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் இப்போது போர் உச்சத்தில் உள்ளது.

5 மணி நேர போர் நிறுத்தம் : கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு குவாட்டாவில் கண்மூடித்தனமான தாக்குதலை அரசு நடத்தியுள்ளது. கடந்த 9 நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர். ரசாயன தாக்குதலில் 170க்கும் மேற்பட்டவர்கள், குழந்தைகள் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மறைந்து சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்ணீரை வரவழைக்கின்றன. உலகம் முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்ததையடுத்து தினமும் 5 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...