மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பங்களைப் பார்வையிடும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
மாமல்லபுரம் பல்லவர் காலச் சிற்பங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கண்டு ரசித்தார்.
மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை வந்தார். அங்கு பல்லவர் கால புராதனச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம் , சங்கு அருங்காட்சியம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை உள்ளிட்டவற்றை கண்டுகளித்தார்.
மாமல்லபுரத்தின் சிறப்புகள் குறித்து அவருக்கு இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் காயத்ரி விளக்கி கூறினார். அங்கு வந்திருந்த வெளிநாட்டுப் பயணிகளிடம் மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகள் எப்படி இருக்கின்றன என ஆளுநர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள் கோயிலுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார். அங்கு ஆளுநரை கும்ப மரியாதையுடன் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர்.
முன்னதாக மாமல்லபுரம் வந்த பன்வாரிலாலை, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், சுற்றுலாத் துறை அலுவலர்கள், டி.எஸ்.பி. சுப்புராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தலசயனப் பெருமாள் கோயிலுக்கு வந்த ஆளுநரை, கும்ப மரியாதையுடன் வரவேற்ற பட்டாச்சாரியார்கள்.
Comments
Post a Comment