மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ‘கொடூரமான 26/11 மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தோருக்காக தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மும்பைத் தாக்குதலில்ன் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை அடுத்து பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.
“மனித குலத்தின் விரோதி பயங்கரவாதம், மும்பை கொடூர தாக்குதலில் உயிரை இழந்த தைரியமான பெண்கள், ஆண்கள் ஆகியோரைத் தலைவணங்குகிறேன்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதம் குறித்த பிரச்சினையை இந்தியா பன்னாட்டு அரங்கில் எழுப்பி வருகிறது. தொடக்கத்தில் உலக நாடுகள் நம்மை பொறுப்புடன் அணுகவில்லை. இப்போது பயங்கரவாதம் ஏற்படுத்தும் சீரழிவுகளை உணர்ந்துள்ளனர்.
நவம்பர் 26 மற்றொரு நிகழ்வுக்கும் முக்கியமான நாள், அதுதான் இந்திய அரசியல் சாசன நாளாகவும் உள்ளது. 1949-ல் இதே நாளில்தான் இந்திய அரசியல் சாசனம் வரையப்பட்டது.
நம் அரசியல் சாசனச் சட்டம் ஏழை மற்றும் நலிவுற்றோரைப் பாதுகாக்கிறது. நாம் தலைநிமிர்ந்து நடக்கும் வகையிலான ஒரு அரசியல் சாசன சட்டத்தை அதனை உருவாக்கியவர்கள் நமக்குக் கொடுத்துள்ளனர்.
நம் ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் சேவைகளைக் கண்டு பெருமைப்படுகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் தீரம் மற்றும் தியாகத்துக்குத் தலைவணங்குகின்றனர். நாட்டுக்காக அவர்கள் தங்கள் இளமையைத் தியாகம் செய்கின்றனர். அதனால்தான் 125 கோடி மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.
சோழர் கால, சத்ரபதி சிவாஜி காலத் தொன்மை கொண்டது நம் புகழ்பெற்ற கப்பற்படை வராலாறு.
செப்டம்பரில் வங்கதேசத்தில் ரோஹிங்கியர்கள் பிரச்சினை எழுந்த போது நம் ஐஎன்எஸ். காதியால் அவர்களுக்கு மனிதார்த்த உதவிகள் புரிந்தன.
மீன்படகு ஒன்றில் மீனவரை நம் கப்பற்படையினர் காப்பாற்றியதாக பபுவா நியுகினியா அரசு நமக்கு ஜூன் மாதம் செய்தி அனுப்பியது.
21 நவம்பரில் மேற்கு வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் சரக்குக் கப்பலை முற்றுகையிட்ட போது ஐஎன்எஸ். திரிகண்ட் அங்கு சென்று உதவியது.
இந்த ஆண்டு மே-ஜூனில் இலங்கையில் கடுமையான வெள்ள பாதிப்பின் போது நம் கடற்படையினர் அங்கு சென்று அரசுக்கும், மக்களுக்கும் சேவையாற்றின” ஆகிய விஷயங்களைப் பேசினார் பிரதமர் மோடி.
Comments
Post a Comment