Skip to main content

Posts

TET - மீண்டும் தகுதித் தேர்வு நடத்தி அரசு பணி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2013 முதல் 2017 வரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அரசு பணி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கௌரவிக்கப்படுவார்கள் எனவும், விருப்ப ஓய்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா? முழு விபரம் உள்ளே!

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தோவிற்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோவு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தோவிற்கான தகுதிகள், வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதனிடையே, இத்தோவில் பங்கேற்க உள்ள தஞ்சாவூா் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தஞ்சாவூா் மா...

கொடுத்துவைத்தவர்கள்..

கள்ளம் இல்லா பிள்ளை அன்பைப் பெறக் கொடுத்து வைத்தவர்கள்..நாம் .  ஆசிரியர்கள்.... குழந்தை ஒன்றோடு கொஞ்சும் போது குழந்தையாகிப் போகிறோம் நாம் ..பெரியவர்கள் வளர்ந்தாலும் வயது கடந்தாலும் சுற்றிலும் பிள்ளைகள் சுறுசுறுப்பாய் நாம்.. ஆசிரியர்கள் குற்றங்களை மறந்து விடும் தெய்வங்களின் அருகிலேயே நாம்...ஆசிரியர்கள் ... எப்போதும் அறிவு வளர்க்க .. கொடுத்துச்சிறக்க .. முடிந்தவர்கள் நாம் ஆசிரியர்கள் ... கண்ட குறை திருத்திச் சரிப்படுத்த அதிகாரம் மிகப் பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்... பெற்றோருக்கும் பெற்றோராய் உற்றவர்க்கும் மேலதிக உரிமை பெற்றவர்கள் நாம் ஆசிரியர்கள்.. இளமை என்றும் மாறாமல்  சுற்றும் இளமைத் துள்ளலோடு முதுமையிலும்  நாம் ஆசிரியர்கள் .... எத்தனைக்கவலைகள் இருந்தாலும் சேட்டைகள் கண்டு இளகிவிடும் நாம் ஆசிரியர்கள் .. தினம் தினம் சிரிக்க வழியுண்டு ... புதுப்புது செய்திகள் பல உண்டு ... எத்தனைச் சிரமங்கள் இருந்தாலும் ... ஆசிரியப் பணிக்குச் சிறப்புண்டு .... ஆத்ம திருப்தி அதில் உண்டு .... ஆசிரியருக்குத் தனியிடமுண்டு ... ஆம்... ...

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர். தமிழக பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படுகி...

உபரி ஆசிரியர்கள் உள்ளபோது TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பனி நியமனம் உண்டா இல்லையா ? - CM Cell Reply

TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரிக்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த அட்டவணை வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

TNPSC Recruitment: 1141 காலிப் பணியிடங்கள்

தமிழ்நாடு கால்நடைத் துறையில் காலியாக உள்ள 1700-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1141 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பணிகள் : கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடம் : தமிழ்நாடு காலிப் பணியிடங்கள் : 1141 நேரடி நியமன பணிகள் கூடுதலாக 636 தற்காலிக அடிப்படை பணிகள் கல்வித் தகுதி : கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில் விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexam...

படித்ததில் பிடித்தது..

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.  சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.  அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.... அதைப் ப...

News about TRB planner..

SOURCE: TIMES NEWS NETWORK

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள 12100 ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு!!

Click here to download

2,144 ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் இழுபறி

''தமிழகத்தில் அரசு மேல், உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், கவனம் செலுத்தாத கல்வித்துறையால் மாணவர்சமுதாயம் பாதித்துள்ளதாக,'' தமிழ்நாடு மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஓய்வு மற்றும் இறப்பினால் ஏற்படும் காலி பணியிடத்தை முன்னரே கணக்கிட்டு, ஆசிரியர் பணியிட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். சமீபகாலமாக இந்த நடைமுறை மே மாதத்தில் இருந்து காலம் கடந்து ஆக., மாதம் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக நவ.,11 ல் கவுன்சிலிங் துவக்கினர். இதில் உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்,முதுநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்ப பட்டது பாராட்டுக்குரியது. அதே போன்று மாறுதலில் சென்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிமூப்பு படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, முதுநிலை ஆசிரியர் பணியேற்றனர்.இதற்கு பின்னரும் தமிழகத்தில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 17 பாடப்பிரிவுகளுக்கென 2...

TODAY'S THOUGHT..

இந்தியாவின்_மிகப் பெரிய_கோயில் எது_தெரியுமா? தெரிந்து_கொள்வோம்!!! *இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? #33 #ஏக்கர்_(#14_லட்சம் #சதுரடி) #நிலப்பரப்பில் #திருவாரூரில் #அமைந்துள்ள, #தியாகராஜர் #கோயில்தான் #இந்தியாவின் #மிகப்_பெரிய #கோயிலாகும்! 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், ...

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம் கெடு உள்ளாட்சி தேர்தல் நடத்தாத தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு.. உச்சநீதிமன்றம்  : உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறதா ? உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த விரும்பவில்லையெனில், உச்சநீதிமன்றமே முன்னின்று நடத்த தயாராக இருக்கிறது. தேர்தல் ஆணையம் :தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. டிசம்பர் 2ம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் : உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டு வருகின்றன. ஆகையால் டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் வழக்கறிஞர் ஜெய் சுகின் : இன்னும் 9 மாவட்டங்களில் உரிய மறுவரையறை செய்யப்படாமல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து ம...

TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கு எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply!

TRB - அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு அறிவிக்கு விரைவில் வெளியிடப்படும்.  CM CELL Reply!

நேர்மறை சிந்தனை..

ஒரு சிறுவனுக்கு தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த சிறுவனுக்கு வருகிறது. ஆனாலும், ஒரு வேளை உண்மையாக இருந்து சாமி கண்ணை குத்திவிட்டால் ..என பயந்து அதை பரிசோதித்து பார்க்காமல் இருக்கிறான்! பள்ளியில் அவனுடைய நண்பன் ஒருவன் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான். இதை இவன் கவனிக்கிறான். அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான் ...குத்தவில்லை! வீட்டில் போய் ஏன் குத்தவில்லை என்று கேட்கிறான், உடனே குத்தலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சி குத்திடும் என்று பதில் சொல்ல, கொஞ்சநாளைக்கு அவனை பின்தொடர்ந்து பார்க்கிறான். அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை! வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது. அவனை போல் இவனுக்கும் பேனா எடுக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அதேபோல் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான்! இவனை வேறு ஒருவன் பார்த்து தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்கிறான், அதெல்லாம் சும்மாடா, அவனையும் ஒண்ணும் பண்ணல இப்போ என்னையும் ஒண்ணும் பண்ணல, உனக்கு வேணும்னா நீயும் போய் எடுத்...

காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள்:தகுதியான ஆசிரியா்களை பரிந்துரைக்க உத்தரவு

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் காலி பணியிடங்களுக்குத் தகுதியான ஆசிரியா்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வில் பெரும்பாலானவா்கள் 'உரிமைவிடல்' செய்துவிட்டதால் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தகுதியான முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களின் பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியா்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், பட்டியலில் இருப்பவா்கள் பதவி உயா்வு பெற தகுதியானவா்களா என்பதையும், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்...

உடல் வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகள்!!

செர்ரி: செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். சிறிய செர்ரி பழங்கள், பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்து, கடுமையான தசை வலியில் இருந்து உடனடி நிவாரணம் தருவதால், தினமும் உடற்பயிற்சி செய்த பின் ஒரு டம்ளர் செர்ரி பழத்தின் ஜூஸை குடிக்கலாம். பூண்டு: பூண்டு தாவரம் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன. பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது. கட்டிகள் கரைய பூண்டை அரைத்த...

இன்றைய சிந்தனை..

*"மன நிறைவான வாழ்க்கை''..* ................................. நமக்கு தேவையானவற்றை அடைய அலையாய் அலைகிறோம்.. கடுமையாக உழைக்கின்றோம்.. அங்கே,இங்கே என்று ஓடுகின்றோம்.. ஆனால் நம்மிடம் இருப்பதை எல்லாம் அனுபவிக்க மறந்து போகின்றோம். இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்க முயலுகின்றோம்.. *நம் உழைப்பின் பயனையே அனுபவிக்காமல் விட்டு விடுகின்றோம்...* இயற்கை ஏராளமான வாய்ப்புகளை நமக்கு தந்து உள்ளது..நாம்தான் அவைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றோம். *நமக்கு வருங்காலம் பற்றிய கவலை தேவைதான்.. உழைப்பும், முயற்சியும் தேவைதான்..* அதைவிட நம்மிடம் என்ன இருக்கின்றதோ, அதை வைத்து மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்,. கடலில் ஒருமுறை யாவது நீண்ட பயனம் மேற்க் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர், தான் நெடுநாள் உழைத்து,சேமித்த பணத்தை கொண்டு கடல் பயணத்துக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினார்.. பத்து நாட்கள் உணவுக்கு என்ன செய்வது என்கிற கவலை அவருக்கு வந்தது..ஆகவே நிறைய ரொட்டிகளை வாங்கினார்.. மற்றவர்கள் எல்லாம் கப்பலில் உள்ள உணவகம் .சென்று உண்டு மகிழ்ந்தார்கள்.. ஆனால் இவர் மட்டும் கப்பலின் மேல்த...

ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்

ஆசிரியர்களின் கனவுகள் நிறைவேறும் காலம் மிக விரைவில் வரவிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, காரிமங்கலம் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், மாவட்டத்தில் 2018-19ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, தனியார் பள்ளியின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது. விழாவில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், "இந்திய அளவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள்தான் படிப்பறிவு மிக்கவர்களாக உள்ளனர். மற்ற மாநில மாணவர்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மாணவர்களுக்குதான் திறமையும் ஆற்றலும் அதிகளவு உள்ளன. இத்த...

TRB - பேராசிரியர் பணித் தேர்வு - சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது.  விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளாக நேற்று (15ம் தேதி) மாலை 5 மணி வரை அவகாசம் இருந்தது. மாநிலம் முழுவதும் 44,767 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், இவர்களில் 33,128 பேர் மட்டுமே, விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பல்வேறு தரப்பிலும், சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் நிலவியதால், 11,639 பேர் முழுமையாக விண்ணப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15ம் தேதி மாலையுடன் நிறைவு பெற்றது. இதன் பின்னர், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது. முன் அனுபவ சான்றிதழ் பெற கால தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் சான்...

இடமாறுதலில் வெளிப்படை; ஆசிரியர்கள் மகிழ்ச்சி

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், அனைத்து காலியிடங்களும் காட்டப்படுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங்கில், ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலியிடங்களுக்கு மட்டும், பணியிட மாறுதல்வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. கவுன்சிலிங், நவம்பர், 11ல் துவங்கியது. தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் கவுன்சிலிங் முடியவுள்ளது.இந்நிலையில், கவுன்சிலிங் முழுமையும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களும், ஆசிரியர்களின் இடமாறுதலுக்கு காட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிப்படை தன்மையுடன் கவுன்சிலிங் நடப்பதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.அதேநேரத்தில், இடங்கள் காலியாக இருந்தாலும், சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு பணியி...

ஆகாய ஆச்சரியம்.!

🐦 அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்? ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற ச...

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனை காக்க ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அச்சமும், தயக்கமும் கொள்ளத் தேவையில்லை - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் சரஸ்வதி பச்சியப்பன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவையொட்டி, 100 சதவீத தோச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சிறந்த ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், 3280 ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்று, கேடயங்களை வழங்கி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சோா்வு ஏற்பட்டுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கிராமப்புற மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தும் சிறப்பான பணியை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். ஆசிரியா்களின் அறிவும், ஆற்றலும், சிந்தனையும் கிராமப்புற மாணவா்களுக்கு சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே திறமை வாய்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தமிழகத்தில்தான் உள்ளனா். ஆசிரி...