Skip to main content

World Earth Day..

 Happy World Earth Day..


நான் பூமி பேசுகிறேன்- இன்று (ஏப்ரல் 22 ) உலக பூமி தினமாம்..


One two three..சோப்பு டப்பா free...

இப்படி ரைமிங்கா சொல்லி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் பூமி பேச ஆரம்பத்தது..நம்மவர்கள் free free என்று சொல்லித்தான் இந்த பூமியை சற்று மோசம் செய்து வைத்துள்ளனரே..


1970 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 44 ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வினை நிச்சயம்:

-------------------

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்ற நீயூட்டனின் மூன்றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயற்கை கூட இதில் விதிவிலக்கு கிடையாது.

மறந்துபோன இயற்கை:

---------------------

இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது. 


காயப்படும் பூமி:

--------------

பூமியின் முதல் எதிரி யார் என்று கேட்டால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும் , கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம்.

எதிரான அறிவியல்:

------------------

இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும்.


பயன்படுத்து - தூக்கி எறி:

-----------------------

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை?சொல்ல போனால் மிகவும் குறைவு. 

"பயன்படுத்தியபின் தூக்கி எறி" கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது. 

நிலம், நீர், காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது.


குறையுங்கள் குப்பைகளை:

------------------------

சரி எப்படி பூமியை பாதுகாப்பது என்று கேட்கிறீர்களா? பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் குறையுங்கள்.

முடிந்தவரை உபயோகியுங்கள்

---------------------------

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ அல்லது மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

மீண்டும் உருவாக்கு:

------------------

மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும். அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .

இயற்கையை சேமிப்போம்:

------------------------

இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை வரும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

கடைசியில் நரகம்தான்:

----------------------

முடிந்த அளவுக்கு மேற்கண்ட செயல்களை நம் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் சூரியன் சுட்டெரித்து நாமெல்லோரும் நரகத்திற்குத்தான் போக வேண்டும். அதற்குள் பூமியே நரகமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.

புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது என்பதே இந்த புவி தினத்தின் முக்கிய கருதுகோளாகும்.

-------------------------Comments

 1. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 2. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 3. மிகச்சிறந்த பதிவு மேடம்

  ReplyDelete
 4. பூமியின் முதல் எதிரி படித்த பண்பாடற்ற மனிதன்..... பாமரன் அல்லன் .... நினைவில் கொள்க....

  ReplyDelete
 5. Gud evg admin mam.pg trb apply date next government vanthathuku apuram terium.but date change aguma.ila same date la vaikavmudiyuma

  ReplyDelete
  Replies
  1. Same date la varadhukku chances adhigam, age relaxation kaga dhan cases file agi iruku, so seekiram ella issues yum solve agidum..

   Delete
  2. ஆமா ஆமா சொல்லிகிட்டாங்க

   Delete
 6. Mam tet posting eppo mam poduvanga and DMK vantha selection process la change varuma

  ReplyDelete
  Replies
  1. Appadiya yet posting sathiyama chance illa due to corona and low vacancy

   Delete
  2. Trt exam with employment seniority vara chances irukku..

   Delete
  3. No trt only tet and employment seniority it's cen percent possible'

   Delete
  4. ௨ண்மையை ௨லகத்திற்கு ௨ணர்த்துங்கள் நண்பரே

   Delete
  5. Neenga ungalukku first unarthikonga.. Trt dhan varum..

   Delete
  6. டீஆா்டி நாமம் தான்

   Delete
  7. அவங்க சொன்ன எல்லாத்துக்கும் இப்படி சொல்ல ஒரு கும்பல் வந்துரும் ஆனால் கடைசில அட்மின் சொன்னது தான் நடக்கும். போங்கடா போங்கடா போகத்த பசங்களா

   Delete
  8. ௨ங்க தகுதி ௭ன்னான்னு தெரியுதே

   Delete
  9. Ungalukku ellam idhu podhum..

   Delete
 7. Coronai irundha enna?? Surplus is different, minimum vacancies nichayama fill pannuvanga..

  ReplyDelete
 8. Mam corona issues naala pg exam postpone aagum nu solrangalae!it's true r not mam?

  ReplyDelete
  Replies
  1. Number of corona cases poruthu dhan adhu decide agum mam, naduvula one month iruku so pakalam..

   Delete
  2. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

   Delete
 9. Puthagasalai admin ku trt mela avlo aasaiyaaaaa..... Appo ter la neenga 82 mark thaaaaaa... Unmaiya sollunga..... Intha massage i paaathuttu en id i block pannidunga..... Mosamana admin neenga.....

  ReplyDelete
  Replies
  1. ௨ண்மை நண்பா ௮௫மையான கேள்வி ஜால்ரா யா௫மே கானமே

   Delete
  2. யாருக்கு அடி? யாரை யாரு அடிக்கறது. டேய் காமெடி பீசுங்களா போங்கடா

   Delete
  3. நீங்க போட்டுக்குறீங்க பாரு அதான் ஜால்ரா. யாரும் தலைக்கு ஜால்ரா போட வேணா அவங்க வந்தாலே நீங்க எல்லாம் காலி தான்

   Delete
  4. ஏன் சகோதரா 82 கேவலமா?? ஒரு வேல நீங்க 90க்கு மேல எடுத்துருந்தா இன்னும் வேலைக்கு போகாம என்ன பண்றீங்க

   Delete
 10. அட்மின் ஒரு பொண்ணு அப்படிங்கிறதுக்காக அத்து மீறி பேசுற நீங்க எல்லாம் ஆம்பள இல்ல, மனுஷ ஜென்மமும் இல்ல

  ReplyDelete
  Replies
  1. Saranya mam ungalukku ivangala pathi ellam nallavey theriyum.. Naai koracha nammalum koraikka kudathu.. So don't react..

   Delete
 11. Admin mam,Please block those types of comments. Becoz it will spoil the name of this blog .

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

MAGICAL THOUGHT..

The magical words we should remember in day to day life.. நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "

மதிப்பு..

 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான். மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம்  நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன் பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு  கொடுத்தனர். ஆனால், கடைச

பத்தடியே போதும்..

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார். அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார் அப்போது அங்கு ஒரு பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார். நகரவாசி அந்த பெரியவரிடம் தன் சந்தேகத்தை கேட்டப் போது, பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்