Skip to main content

Posts

Showing posts from July, 2020

TET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை!

2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம் . நாங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகளாக பணிநியமனம்பெறாமல் அல்லல்பட்டு எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற தொடர் முறைகேடுகளே , எங்கள் பணிவாய்ப்பு பரிபோக மூலக்காரணம். எங்களது நிலையை பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் . ஆசிரியர்தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றநிலை எங்களது வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சியது போல் உள்ளது. கடந்த ஆறாண்டுகளாக தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் கூட நிரப்பபடவில்லை. மேலும் கடந்த ஆறாண்டுகளில் இருநூறுக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே பேராசிரியருக்கான தகுதிதேர்வு SLET , NET சான்றிதழ் காலம் ஆயுட்காலமாக உள்ளது என்பதை நினைவு...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள், தேர்வுத் துறையின் இணைய தளத்திலும், மாணவர்களின் Mobile எண்ணுக்கு SMS மூலமும் வெளியிடப்பட உள்ளது. தமிழக அரசு அறிவிப்பு தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைக்கென கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை, விளக்கங்களைக் கேட்டறியலாம்

450 பட்டதாரி மற்றும் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் , அரசு நடுநிலைப்பள்ளிகள் , அரசு உயர்நிலைப்பள்ளிகள் , அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் காலியாகக் கிடக்கும் ஆசிரியர் பணியி டங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது . இந்த வருடம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரி யர் பணியிடங்கள் காலியாக உள்ளன . அந்த இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் எழுதி உள்ளார் . இதை யொட்டி ஆசிரியர் தேர்வு வாரி யம் விரைவில் 1,062 முதுகலை பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத் துவதற்கான அறிவிப்பை ஆசிரியர் வெளியிட உள்ளது . அதுபோல அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 450 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி நிரப்பப்பட உள்ளது .

TODAY'S THOUGHT..

அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் சிறப்பு வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்து இருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகைப் புற்று நோய். இன்னும் ஓரிரு நாள்கள் கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்  பேசிக் கொண்டு இருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்து கொள்ளும் நர்ஸ் வந்தார். `சார்... உங்களைப் பார்க்க உங்க மகன் வந்து இருக்கார்.’’ கிழவர் கண்ணைத் திறந்து பார்த்தார். நீர்த் திரையிட்ட கண்களால், எதிரே மங்கலாக நர்ஸுக்கு அருகே ஓர் உருவம் இருந்ததைப் பார்த்தார். அவருக்கு எதிரே 20 வயதுக்குள் இருக்கும் ஓர் இளைஞன் நின்று கொண்டு இருந்தான். சீருடை  அணிந்து இருந்தான். அவன் அணிந்து இருந்த சீருடை 'யூத்மரைன்'  (Youth Marine) என்கிற, அமெரிக்க அரசு நடத்தும் இளைஞர்களுக்கான ஒரு திட்டத்துக்கானது. படுக்கையில் இருந்த முதியவர், நர்ஸிடம் தன் மகன் `யூத் மரைன்’ புரோக்ராமில் இருக்கிறான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். அதனால் தான், நர்ஸ் அவனைச் சரியாகக் கண்டு பிடித்து அவர் முன்னே நிறுத்தி இருந்தாள். இளைஞன் ப...

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுமா ? குழுவை நியமித்தது தமிழக அரசு !!

  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்தது. பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய தமிழக அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உள்ளிட்ட 11 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் தடை செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது பற்றி இக்குழு ஆராய உள்ளது. பல்கலைக்கழக மா...

மகாபாரதத்தில் ஊரடங்கு!!

மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார். அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார். இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார். மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார். நாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது. இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர். இதன் உள்கருத்தைப் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை. நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு...

பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மத்தியஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அது வரும் 31ம் தேதி இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எப்போது திறக்க வேண்டும், வகுப்புகள் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் பணிக்கு வர வேண்டும் என்று சில மாநிலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளன. இது ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணிக்கு வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் வற்புறு...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவது குறித்து ஆய்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால்உற்பத்தியாளர்களுக்கு கறவைமாடுகள் வாங்க கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் தற்போது 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அரசு முடிவு எடுக்கும்.

2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது?

2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் முடிவடைய உள்ளதால் அவர்களுக்கு பணிநியமனம் நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 7,200 ஆசிரியர்கள் உபரியாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.