Skip to main content

Posts

6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு.

    6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்த பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்.

AGE RELAXATION GO

சிக்கல் வரும் போது..

சிக்கல் வரும் போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது.  சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும். சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும்.  நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும். நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும் ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே., "சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது. அவரிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார், Ctrl என்பது ( Control ),(கட்டுப்படுத்தல்) alt என்பது ( alternate) ,( மாற்று..) del என்பது (delete ),( நீக்குதல்..  சிக்கல் வரும் போது நம்மை நாமே  கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்".. வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்., மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைக...

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு ஒரு வார கால தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுகலை ஆசிரியர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு தடை! - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்ற படவில்லை என்று சென்னை உயரநீதிமன்றம் கண்டனம். Congrats அரங்க ராஜா முனைவர்  Madras high court #stays Recruitment of post graduate teachers by Tamil nadu recruitment board.Madras high court States that it's order pertaining to guidelines for scribes and other facilities are not Subscribed to recruitment advertisements.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 09.09.2021 அன்று வெளியான முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பிற்கு ஒரு வார கால தடை - மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!!!

FLASH NEWS..

இன்றைய சிந்தனை..

உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது,அதிலிருந்துg  ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு,டீ யை குடித்துவிட்டு,எதேச்சையாய் கவனிக்கிறேன்,அந்த வெல்ல உருண்டையின்மேல் அவ்வளவு எறும்புகள்..!! இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்று எடுத்துக்கொண்டாலும்... அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும்,சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம்.அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டது. இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம்,வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்துவிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று..! யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!! இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது. எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும்பை தேடியிருக்கிறது..! தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும், மற்றொன்று பொருளாக இருந்தாலும்,இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும். அந்த புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன. ...

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்பு. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு. மேலும் தமிழகத்தில் முதலில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த சிறப்பு பேட்டி: பள்ளிகள்தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு. பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறித்து ஆலோசித்தோம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம் எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம். மாணவர்களின் நலன் முக்கியம் என்பதையும் கருத்தில் கொண்டு உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட க...

படித்ததில் பிடித்தது..

அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர்.தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே என யோசித்த பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். ”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார். அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன்” எனக் கூறினார். உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள்; நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்த...

ஆசிரிய பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் 2021 (BRTE - Transfer Counselling Form 2021) - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு.

    ஆசிரிய பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு. BRTE - Transfer Counselling Form 2021 -  Download here

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு – 40% ஆக அதிகரிப்பு!

  தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசு பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்டு 20ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் படி கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. அதில் நீட் தேர்வு மற்றும் காவல் துறைக்கான சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்காக தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் திமுக அரசு அக்கறையுடன் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் 33 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்திய மாதர் சம்மேளனம் சார்பாக போராட்டம் ...

TODAY'S THOUGHT..

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.._ _எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை.._ ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை.. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை.. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.. என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை.. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.. உடனே தளபதி வீரர்களை அழைத்து, *“சரி வீரர்களே.. நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.. இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன்.. அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே.. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம்.. இப்படியே திரும்பிவிடுவோம்.. வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்.. சரியா..?”* _*“ஆ.. நல்ல யோசனை..  அப்படியே செய்வோம்..”*_ _நாணயத்தைச் சுண்டினான் தளபதி.._ _காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.._ *தலை..!* வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.. ...

Incentive news..

 *10.03.2020க்கு முன் உயர்க்கல்வி எம்.ஏ ,எம்.எஸ்.சி ,எம்.பில் ,பி.எச்.டி போன்ற மேற்படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஊக்கவூதியம் பெற கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஊக்க ஊதியம் எப்போது கிடைக்கும் என்பதற்கான விளக்கம் -முதலமைச்சரின் தனிப்பிரிவு.*
  1-8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : அறிக்கை சமர்ப்பிப்பு அமைச்சர் தகவல்   தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகு, கொரோனா சூழலை ஆராய்ந்து பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறியுள்ளார்.  மேலும் , பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்து முதலமைச்சரிடம் வரும் 15ம் தேதி அறிக்கை தாக்கல் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இன்றைய சிந்தனை..

                சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசா...

TARGET COACHING CENTRE CONTACT NUMBERS..

 Friends anybody in need of target coaching centre number can make use of the following numbers for joining there or to get the materials alone on payment of cash..

PG TRB ALL SUBJECTS PREVIOUS YEAR QUESTIONS

    PGTRB - Tamil | Previous Year Questions PGTRB - Tamil | Old Questions Download (2001) | Original -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2001) | Original -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2002) | Original -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2002-03) | Pudiya Vidiyal -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2003-04) | Pudiya Vidiyal -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2004-05) | Pudiya Vidiyal -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2005-06) | Pudiya Vidiyal -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2006-07) | Pudiya Vidiyal -  Click Here for Download BRT - Tamil | Old Questions Download (2009) | Original -  Click Here for Download PGTRB - Tamil | Old Questions Download (2012-13) | Pudiya Vidiyal -  Click Here for Download PGTRB...

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும்

  முதுநிலை பட்டதாரி ஆசிரியா் நியமன வயது வரம்பை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை இணைய போட்டித் தோவு மூலம் தோந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியா் பணிக்கு வயது வரம்பு நிா்ணயிக்கப்பட்டதில்லை. ஒருவா் ஓராண்டுக்கு ஆசிரியா் பணி செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பது தான் வயது வரம்புக்கான தகுதி ஆகும். ஆசிரியா்களுக்கான ஓய்வு பெறும் வயது 60-ஆக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், 59 வயது நிறைவடையாத உரிய கல்வித் தகுதி பெற்றுள்ள அனைவரும் இந்தப் போட்டித் தோவுகளுக்கு அனுமதிக்கப்படுவதுதான் நியாயமானது ஆகும். ஆசிரியா் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபா...

"ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"

    "ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"- கல்வித்துறை ஆணையர் & தமிழக முதலமைச்சரின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் குடும்பங்கள். அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/08/2010 க்குப் பிறகு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் சுமார் 1000 ஆசிரியர்கள் சார்பில்...

அன்பு..

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..! திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..! இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..! மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..! முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..! ஏனென்று கேட்டபோது சொன்னாள்:- நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..! வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..! குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...! அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார், “அன்பு என்றால் இது தான்" ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...! எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...! நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...! ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...! ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு NEET (UG) 2021- முக்கிய அறிவுரைகள்

 

TODAY'S THOUGHT..

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார். அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்” “அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?” “நகராமல் தான் இருக்கிறது” “உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.” அப்படியே சிக்னல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. “நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”. எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப...