Skip to main content

Posts

பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம்

அலுவலக ஊழியர்கள் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயம் தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களும் பதவி உயர்வின் மூலம் ஆசிரியர் பணி பெறுவதற்கு, இனி டெட் தேர்வின் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வின் மூலமாக ஆசிரியர் பணி வழங்குவதற்கான தமிழக அரசு செய்த விதிமுறைகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்து தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு படித்து முடித்த அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு மூலம், ஆரம்பப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புடன் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CTET - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியா் பணி தகுதித் தோவுக்கு விண்ணப்பிக்க வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய ஆசிரியா் தகுதித் தோவு இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசின் ஆசிரியா் தகுதித்தோவு நிகழாண்டு ஜூலை 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 112 தோவு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோவுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாா்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் 5- ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை இணையதளம் மூலம் தோவுக் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும் பாடத்திட்டம், எழுத்துத்தோவு மொழி, தோவு மையங்கள், தோவுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரியின் மகிமை என்ன?

"லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு  பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து  தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது.  எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந...

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசுப்பள்ளிகள் கல்வித்தரத்தில் பின்தங்கிய தமிழகம்

இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்

ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் 1999 முதல் பிப்., 21ல் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'எல்லைகள் இல்லாத மொழிகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.இந்தியாவில் அதிகபட்சமாக 'இந்தோ-ஆரியன்' மொழிக்குடும்பத்தை 74 சதவீதம் பேர் பேசுகின்றனர். இதில், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி உள்பட பல மொழிகள் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பத்தை 20.61 சதவீதம் பேர் பேசுகின்றனர். மத்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எந்த மொழி சிறப்பு ஒருவரது இதயத்தை தொட வேண்டுமெனில் தாய்மொழியில் பேச வேண்டும், மகாத்மா காந்தியும் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தினார். இன்றைய சூழலில் தாய்மொழியில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குழந்தைகள் இளமையில் மற்ற மொழிகளில் கற்பதால், அவர்களுக்கு கற்கும் திறனும், ஆர்வமும் குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது வரலாறு கிழக்க...

TRB - வட்டார கல்வி அலுவலர் ( BEO) தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டார கல்வி அலுவலர் கணினி வழி தேர்வு 14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது . தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www . trb . tn . nic - ல் வெளியிடப்பட்டு உள்ளன . Datewise / Sessionwise 14 . 02 . 2020 FNIAN , 15 . 02 . 2020 FNIAN and 16 . 02 . 2020 FNIAN master question and the key is uploaded in this website . தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session - க்கு உரிய Master Question Paper TRB website - ல் வெளியிடப்பட்டுள்ளது . வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகுறிப்பிற்கு objection தெரிவிக்கும் போது அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் . Master question paper I Representation மற்றும் அதற்கான விடைக்குறிப்பு தவிர்த்த தேர்வர்கள் objection ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெ...

மன்னிக்கப் பழகுவோம்..

மன்னித்து விடுங்கள் ஊருக்காக நீங்கள்  உழைத்தாலும் *உங்களை நினைத்துப் பார்க்காத* உலகம் இது மன்னித்து விடுங்கள் அவர்களுக்கு தெரியாது *நீங்கள் இவ்வுலகிற்காக உழைக்கப் பிறந்தவன்* என்று உங்களால்  உதவிகள் பெற்றவர்கள் எல்லாம் உங்களை  எண்ணிப் பார்க்கவில்லை என்றாலும் மன்னித்து விடுங்கள் அவர்களுக்கு தெரியாது *நீங்கள்  பயன்கருதாது உதவிகள் செய்பவன்* என்று உங்கள்  உழைப்பை கொண்டு வாழ்வோர், வாழ்ந்தவர் எல்லாம் உங்களை  உதாசீனப்படுத்தினாலும் மன்னித்து விடுங்கள் அவர்களுக்கு தெரியாது *நீங்கள்   சகிப்புத்தன்மை நிறைந்தவர்* என்று  உங்கள்  நிழலில் இளைப்பாறுபவர்கள் கூட உங்களை வெட்டி காயப்படுத்தினாலும் மன்னித்து விடுங்கள் அவர்களுக்கு தெரியாது  *எத்தனை முறை உங்களை வெட்டினாலும் மீண்டும் தழைத்து வந்து  நிழல் தரும் உங்கள்  அருமை* உங்களைப் பார்த்து சிரிப்பவர்கள் எல்லோரையும்  மன்னித்து விடுங்கள்  *நீங்கள்  சிரிக்கப் பிறந்தவன் , மற்றவர்களையும் சிரிக்க வைக்கப் பிறந்தவன்* என்பது அவர்களுக்கு தெரியாது உங்களை...

33 சதவீத தமிழக நடுநிலைப் பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லை. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன. நடுநிலை பள்ளிகளில் 33% அளவிற்கு பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,966 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்றுப வருகின்றனர். ஆனால் நடுநிலை பள்ளிகளில் 1 தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர் என்பது ஆசிரியர்களின் புகாராகும். 5 பாடங்களையும் 3 ஆசிரியர்களே கையாள்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்...

முடிஞ்சவர காலை தொங்கவச்சு உக்காருவதை தவிர்த்துவிடுங்கள்… எங்க உக்காந்தாலும் சம்மணம் போட்டே உக்காருங்க

நாமெல்லாம் எப்பவுமே காலை தொங்க வச்சுத்தாங்க அதிகமா உட்கார்கிறோம்… 2 சக்கர வாகனத்தில போகும்போது, பேந்தில போகும்போது, தொடர்வண்டியில போகுறப்போ, படம் பார்க்கிற தியேட்டர்லயும், பள்ளிக்கூடங்கள்லயும், வேலை பாக்குற இடங்கள்லயும், ஏன் நம்ம வீட்டுலயும், கட்டில்ல, நாற்காலில இப்படி நல்லா யோசிச்சுப் பாத்தா நாம ரொம்பநேரம் நம்ம காலைத் தொங்க வச்சுக்கிட்டே தான் இருக்கிறோம். இப்படி காலைத் தொங்கவச்சுக்கிட்டு உட்காருவதால் நமக்குப் பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டகுது… இதுக்குக் காரணம், நம்ம காலைத் தொங்கவச்சு உக்காரும்போது, நம்ம உடம்புல ஓடுற இரத்த ஓட்டம் இடுப்புக்குக் கீழ மட்டுமே அதிகமாக போகுது… நாம காலை மடக்கி சம்மணங்கால் போட்டுக்கிட்டு உக்காரும்போது நம்ம இடுப்புக்கு மேல ரத்தஒட்டம் அதிகமா வர்றதுக்கு வாய்ப்புள்ளது. நம்ம உடம்புல இடுப்புக்குக் கீழ இருக்குற நம்மளோட கால்களுக்கு, நடக்குறப்போ மட்டும் இரத்த ஓட்டம் போனால் போதும். மிக முக்கிய உறுப்புகளான நுரையீரல், மூளை, கண், காது, சிறுநீரகம், கணையம் ஆகியவை அனைத்தும் இடுப்புக்கு மேல் பகுதியில தாங்க இருக்குது. ஒருத்தர் காலைத் தொங்க விடாம சம்மணம் போட்டு உட்கார்...

நாகரிக கோமாளி..

*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.* =============== *நாங்களும் மாறினோம்.* ================ *இன்று அதையே*  ============== *BARBECUE என்று BC,* *KFC ,* *MACDONALD இல் விக்கிறான்.* =============== *2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.* *பற்பசையை அறிமுகப் படுத்தினான்.* ============== *இப்போது உங்கள் TOOTHPASTE இல்* *SALT + CHARCOAL* *இருக்கா ?* *என்று கேட்கிறான்.*  ============== *3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.* =============== *உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.* ============== *இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேஷ விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .* ============= *4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.* ============= *ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.* ============= *இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின்  SPERM ஏற்றுமதி செய்கிறான்.* =============== *5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.* ============== *COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.* ============== *இன்று அவனே இளநீரைத் தகரத...

அரசு பள்ளிகளுக்கு இடியை இறக்கும் மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு தற்போது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மொத்த தலைமையாசிரியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் இப்படி நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைவாரியான தேர்வு நடத்தி பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்கிறது.தங்களது புதிய கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் இது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.. தமிழகத்தைப் பொறுத்தவரை 24 ஆயிரத்து 321 ஆரம்பப் பள்ளிகளும் 6,966 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும்பணியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.. இந்தநிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக தலைமை ஆசிரியர்கள் என்றால், அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்...