செருப்படி கொடுத்த தமிழ்நாடு! தமிழனுக்கு சொரனை வந்த பொன் நாள்! ஜி.எஸ்.டி யை மறக்கவில்லை, இந்தி திணிப்பை மறக்கவில்லை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை துவங்கி தூத்துக்குடி சம்பவம் வரை மறக்கவில்லை, நீட் அக்கிரமந் தொடங்கி, எச் ராஜா அடாவடிகளை மறக்கவில்லை, வாயிலே சுட்டதை மறக்கவில்லை, காவிகள் செய்த பாவங்களை மறக்கவில்லை, கீழடி அகழ்வாராய்ச்சியை இருட்டடிப்பு செய்து இன அழிப்பை தொடங்கிய ராஜபக்ஷேயின் மறுரூபத்தனத்தை மறக்கவில்லை, வட இந்திய ஊடுறுவல்களை மறக்கவில்லை, ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியின் அசிங்கங்களை மறக்கவில்லை.. சும்மா சொல்லக்கூடாது..! வச்சு செய்தீர்கள் மக்களே! டிடிவி, நாம் தமிழர், டார்ச் லைட்டேல்லாம் ஓட்ட பிரிச்சாலும், நீங்க சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க..! மொழிப்போர் காலங்களை திருப்ப அழைத்துக்காட்டி பாசிசமே வெளியே போ என வெறித்தனமாக அடித்திருக்கிறீர்கள்..! இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு தனியாக தெரியும் சித்திரத்தைப் பார்க்கும்போது மெய் சிலிர்க்குதடா..தமிழா..! இந்தியா எனும் ஒரு நாட்டில் யாரோ சில பாசிசவாதிகள் அந்தபக்கம் ஜெயித்தார்களாம் என நாங்கள் இ...