Skip to main content

Posts

Showing posts from June, 2020

அப்பா..

தாங்கி பிடிக்கும் ஊன்று கோல்...  வாழ்க்கையை சுமக்கும் சுமைதாங்கி பறவை..  பிள்ளைகளின் கதாநாயகன்...  கடினபேச்சின் கருணையுள்ளம்..  மகள்களின் மகான்கள்...  கண்ணீர் கண்களில் இல்லை இதயத்தில் வடிப்பார்கள்...  கடின முகம் காட்டி அன்பை மறைப்பார்கள்...  நிழல் படத்தை பார்த்தே வாழ்க்கையின்  நிஜங்களை தொலைத்தவர்கள்...  புன்னகை புதைத்திடும் மணலில் புற முகத்தை மறைத்தவர்கள்... உடலை ஓரிடத்திலும் உயிரை மற்றொரு இடத்திலும் வைத்து கூடு விட்டு கூடு  பாயும் வித்தகர்கள்.... பறவையை போல் இரைத்தேடி பறப்பவர்கள்....  கூடு தேடியும் விரைபவர்கள், தியாகிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு தகப்பன் வடிவில்..... 🙏