Skip to main content

Posts

Showing posts from January, 2019

TODAY'S THOUGHT..

தமிழ்நாட்டில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் , பெண்கள் கவனத்திற்கு🏹🏹🏹 அரைச் சம்பளம் தந்தால் போதும், நாங்கள் வேலைக்கு வரத் தயாராக இருக்கிறோம் என்னும் அரை வேக்காடுகளுக்காக இந்தப் பதிவு! இதுவே அயோக்கியத்தனம் செய்யும் அரசாங்கத்தின் வெற்றி! நம் கைகளைக் கொண்டு நம் கண்களைக் குத்துவது. இந்த மூடர்கள் அழிவது உறுதி! முடிந்தால் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இதேபோல் உங்கள் உரிமைகளுக்காகப் போராடுங்கள்! நீங்கள் யாரால் நசுக்கப் படுகிறீர்கள் என்று கவனியுங்கள். கொஞ்சமாவது இருக்கும் மூளையைப் பயன்படுத்துங்கள்! #ஊதியத்திற்கான போராட்டம் இல்லை- இது #உரிமைக்கான போராட்டம். சம்பளம் அதிகம் தா! என எங்கேனும் ஒற்றைக்குரல் கேட்டீரா? ஊதியக்குழு அறிவித்த ஊதியம் தா என்னும் குரல்தானே கேட்கிறது. 5 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருப்போருக்கு ஓய்வூதியம் ஏன் என்றா கேட்டோம். 58 வயதுவரை பணியாற்றும் எங்களுக்கு ஏன் இல்லை ஓய்வூதியம் என்றுதானே கேட்கிறோம். கணக்கில் காட்டாத உங்கள் சொத்தைப்பற்றியா கேட்டோம்? 21 மாதமாக தரப்படாமல் இருக்கும் எங்கள் ஊதியத்தைத

தமிழக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, தமிழக தலைமைச்  செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-இல் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காவல்துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சமாக பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியது. அப்போதைய டிஜிபி அசோக்குமார், இந்த கடிதத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இந்நிலையில், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்கள

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை: 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தொடர் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் என தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சஸ்பெண்ட், பணியிட மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. போதிய நிதியில்லாத காரணத்தினால், அரசு ஊழயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய தமிழக அரசு, ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களையும் நியமனம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். நடவடிக்கை இந்நிலையில், சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்ம

உண்மைகள்_உபதேசமாய்

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை. 8. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 9. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான். 10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 11. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 12. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 13. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 14. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). 15. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?) 16. ஆனை இருந்து அரசா

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இன்று ஒரு நாள், 'ஸ்டிரைக்'

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள், இன்று ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 'போராட்டத்தில் ஈடுபடுவோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இதனால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அரசு அங்கீகாரம் பெற்ற சில சங்கங்கள், இன்று ஒரு நாள், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.தலைமை செயலக சங்கத் தலைவர், பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:கைதான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையெனில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவோம் என, முதல்வர் மற்றும் தலைமை செயலரிடம் மனு அளித்தோம்.யாரும் கண்டு கொள்ளாததால், இன்று திட்டமிட்டபடி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். முதல்வர் எங்களை அழைத்து பேசாவிட்டால், அடுத்கட்ட நடவடிக்கை குறித்து, நாளை முடிவு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினா

இன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம்; ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்க உத்தரவு

சென்னை: இன்று(ஜன.,30) முதல் பணியில் சேருவோருக்கு, ஒழுங்கு நடவடிக்கையுடன், புதிய பணியிடம் வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பணியில் சேருவதற்கான கெடு, நேற்று மாலை, 7:00 மணியுடன் முடிந்தது. பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர். சென்னையில், சில ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை தவிர, அனைத்து ஆசிரியர்களும் பணியில் சேர்ந்துள்ளனர். வேலுாரில், 100 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரியலுாரில் ஒருவர்; நாமக்கல்லில் நான்கு பேர்; தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில், தலா ஐந்து பேர் மட்டும் வேலைக்கு வரவில்லை என, அதிகாரிகள் கூறினர். வேலைக்கு சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்களின் எண்ணிக்கை விபரம், இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், அரசின் பலகட்ட அவகாசத்தையும் மீறி, பணிக்கு திரும்பாமல், போராட்டத்துக்கு சென்றவர்கள் மீது, அரசு விதிகள், '17 - பி' பிரிவிலான நடவடிக்கை, இன்று துவங்க உள்ளது. இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் நேற்றிரவு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறை அவக

தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

ஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமாகி இருப்பதை அடுத்து அரசால் நியமிக்கப்பட்டு வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை  வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்  பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வு கருத்தில் ெகாண்டும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற  பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் போராட்டத்தினால் முற்றிலும் ஆசிரியர் வருகையின்றி உள்ள  பள்ளிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்த உரிய நடவடிக்கையை அனைத்து மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வ