Skip to main content

Posts

Showing posts from February, 2019

தேசபக்தி ....

உலகில் எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள்.. அந்த நாட்டின் தேசபக்தி என்பது இன்னொரு நாட்டின் மீதான பகையால் உருவாக்கப்பட்டதாக இருக்காது .. இதில் விதிவிலக்காக இருப்பது இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் தான்.. இந்தியா உருவாகும் போது முன்னூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்களை சேர்த்து தான் இந்திய ஒன்றியம் உருவானது. அதாவது இந்திய ஒன்றியம் என்பது சேர்க்கப்பட்ட கூட்டம் தான், தானாக சேர்ந்த கூட்டம் அல்ல. இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல்வேறு இனம், மொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை இங்கு தேச பக்தியில் ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பாகிஸ்தான் மீதான பகையும் உதவுகிறது. பாகிஸ்தான் மக்களின் தேச பக்தியும் இப்படியே தான் உருவாக்கப்படுகிறது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்த பகை உருவாக்கப்பட்டது. இந்த பகை தான் இரு நாடுகளின் தேச பக்தியை இன்று வரை வளர்த்து கொண்டிருக்கிறது ... இதில் குறிப்பிடதக்க அம்சம் எதுவெனில் இரு நாட்டிலும் எதிர் எதிராக பிரிந்து போன இரண்டு மதங்கள் பெருபான்மை சமூகமாக இருப்பது தேசபக்திக்கு இன்னும் கூடுதல் பலம் . இதனால் தான் 1000 - க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இ

தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தர் விலகல் பொறியியல் கலந்தாய்வில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் அன்பழகன் பேட்டி

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பில் இருந்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் விலகியதால் கலந்தாய்வில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும்  ஏற்படாத வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நேற்று நடந்த பள்ளி விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அண்ணா பல்கலை துணைவேந்தர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், தமிழ்நாடு தொழில்நுட்ப கவுன்சிலை சேர்ந்த 2 அதிகாரிகள், 2 பொறியியல் கல்லூரி முதல்வர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அக்குழுவிற்கு அண்ணா பல்கலை துணைவேந்தரே தலைவராக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்க ஆணையரை, இணை தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. கூடுதல் பலம் சேர்க்கவே, இணை தலைவர் நியமிக்கப்பட்டார். இதனால் தலைவர் பொறுப்பில் இருந்து துணைவேந்தரை அரசு நீக்கவில்லை. ஆனால், துணைவேந்தர் சூரப்பா, எதற்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் என்று தெரியவில்லை. இதுகுற

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம்,  புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  இந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழகம்,  புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  வரும் 19-ஆம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும். இதனை மொத்தம் 7, 082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகள்,  பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்) 25,741 தனித்தேர்வர்கள்,  புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள்) 1,144 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதவுள்ளனர். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள்;  4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவிகள் ஆவர்.  மேலும் இரு திருநங்கைகளும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ளனர். 150 புதிய தேர்வு மையங்கள்:  சென்னை மாநகரில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 419 மாணவ, மாணவிகள் 158 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15,408 பேர் தேர்வெழுதவுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக  தமிழகம்,

8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

8, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது:   தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அப்போது, இங்கு போதிய கட்டமைப்பு இல்லை என்று சிலர் வேறு மாநிலங்களில் தேர்வு எழுதவைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத முடியும். இது குறித்து மத்திய நீட் மையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவ, மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றித் தேர்வுகளை எழுதலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தற்போது 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே 5 ஆயிரம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து 25 நாள்கள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுகளுக்குப் பிறக

TODAY'S THOUGHT..

அதிர்ந்து கிடக்கின்றது உலகம், மிக நுட்பமான தாக்குதலாக இது கருதபடுகின்றது இரவில் செயற்கை கோள் வழிகாட்டலில் லேசர் குண்டுகளை வீசும் நுட்பமும் எதிரிகளின் ரேடாரை முடக்கிவிட்டு அடிப்பதும் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு வல்லரசுக்கான பலத்தில் மிக துல்லியமாக அடித்திருகின்றார்கள், இந்த தாக்குதலில் பிரான்ஸின் மிராஜ் என்பது இறக்குமதி என்றாலும் செயற்கைகோள் உள்பட பல விஷயங்கள் நம் சொந்த சரக்கு எதற்கு அடிக்கடி ராக்கெட் ஏவுகின்றது, கழிவறை இல்லா தேசத்தில் இது தேவையா என பல புரட்சியாளர் கேட்பார்கள், அவர்களுக்கான பதில் இன்று தெரிந்திருக்கின்றது மகா முக்கிய உளவுதகவலும் கிடைத்திருக்கின்றது என்பதுதான் விஷயம் மலைகளும் காடுகளும் நிரம்பிய பகுதியில் அதுவும் நள்ளிரவில் நடந்த மிக துல்லிய தாக்குதல் பாகிஸ்தானை நிலை குலைய வைத்திருக்கின்றது 3 இடங்களில் தாக்கி ஜெய்ஸ் இ முகமது இயக்க தலமை முகாமினை நொறுக்கியிருக்கின்றார்கள், ஏராளமானோர் பலியாகியிருக்கலாம் அவர்களும் புல்வாமா தாக்குதலுக்கு பின் ரேடார் சகிதம் ரெடியாகத்தான் இருந்திருக்கின்றார்கள், அதை முடக்கியதைத்தான் தாங்க முடியவில்லை அவசர கூட்டம் பிரதமர் இம்ரான்கான்

தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது .பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றன. பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம் : பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது  மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை  மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன  தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தே

அனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி மற்றும் இணையதள வசதி விரைவில் செய்து தரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் திருவள்ளூர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம், பொன்னேரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியது: தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக மாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு அவர், அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்திலுள்ள பள்ளியில் பயிலும் 9, 10, 11, 12-ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன. 15 லட

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்..

🌼யாரோ புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ? 🌼யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன? 🌼இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது. 🌼சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. 🌼உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்... 🌼உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். 🌼அது மனதின் வேலை. 🌼உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. 🌼எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை. 🌼சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. 🌼சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது. 🌼கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை. 🌼வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது. 🌼இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் வி

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு பின் நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.' தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, இந்த தேர்வை எழுத முடியும். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கை வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் பணியில், 148 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு மட்டும், போட்டி தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டதால், தற்போதைய நிலையில், போட்டி தேர்வை நடத்த வேண்டாம் என, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது .தேர்தல் முடிந்த பின், ஜூன், ஜூலையில் போட்டி தேர்வை நட

வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது

வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. அப்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாட திட்டம் மற்றும் தொடர் செயல்முறை திறன் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, காலாண்டு வரையில், முதல் பருவம்; அரையாண்டில், இரண்டாம் பருவம் மற்றும் ஆண்டு இறுதியில், மூன்றாம் பருவத்துக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு பருவத்துக்கான தேர்வை எழுதிய பின், அந்த பாட புத்தகங்களை, மீண்டும் மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அடுத்த பருவத்துக்கான பாடங்களை மட்டும் படித்து, தேர்வு எழுதினால் போதும். இந்த முப்பருவ முறையில், ஒன்பதாம் வகுப்பு வரை படிப்போருக்கு, 10ம் வகுப்பில், ஆண்டு முழுவதுக்குமான பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும்,  தேர்ச்சி பெறவும் திணறும் நிலை உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்து, ஒன்பதாம் வகுப்புக்கான, முப்பருவ பாட முறையை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. இதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயி