Skip to main content

Posts

SUNDAY'S THOUGHT..

 "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா?  முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன். ”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”… -ஒரு மாணவி. ”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அ
Recent posts

ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்க கூடாது..

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர். அ.மாயவன் அவர்கள்,மாநிலத் தலைவர் திரு சு.பக்தவச்சலம் அவர்கள் பொதுச் செயலாளர் திரு. சா.சேது செல்வம் அவர்கள் பொருளாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்கள் அனுப்பிய கடிதம்..

படித்ததில் பிடித்தது..

*தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல.. அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு..!!* *இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டாலும்.. புன்னகை செய்யுங்கள்; புன்னகையின் அடுத்த நிலை தான் வெற்றி..!!* *பேராசைக்கும், இலட்சியத்திற்கும்கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!!* *வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாதீர்..!வெற்றி தொலைவு என்பதால் முயற்ச்சியை கைவிட்டு விடாதீர்..!!* *உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ.. அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள்....!பொருளானாலும் உறவானாலும்....*    *அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர் ......!அதனால் பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமே...!* *உங்கள் கவுரவம் வேறெங்கும் இல்லை..! உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!!* *நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம்..!நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வது கடினம்..!!* *உங்கள் எதிரிகளை கவனியுங்கள்.. அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்..!!* *அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.. வாழ்க்கை என்ற

2013 டெட் தேர்வில் 90க்கு மேல் எடுத்தவர்கள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு!!

 2013டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெயிட்டேஜ் முறையினால் வாழ்வாதாரம் இழந்து விட்டதாக தேர்வர்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

2013 ஆசிரியர் தகுதி தேர்வு!!

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு பி.கே.இளமாறன் 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்ற ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய சிந்தனை..

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்... அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. *என்ன நடக்கும்?...* *மான் பிழைக்குமா?...* *மகவை ஈனுமா?...* *மகவும் பிழைக்குமா?...* *இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...* *வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...* *புலியின் பசிக்கு உணவாகுமா?...* பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம். *மான் என்ன செய்யும்?...* மான் தன் கவனம் முழுதும், தன் மகவை

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக மாற்ற திட்டம்?

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக, 2020ல் அதிகரிக்கப்பட்டது.  ஆட்சி மாற்றம் அதன்பின் கடந்த பிப்ரவரியில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.தற்போதைய தி.மு.க., அரசு, ஓய்வு பெறும் வயது 60 என்பதை, ஏற்கனவே இருந

குப்பை வண்டிகள்..

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான். இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்

அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1

  மத்திய அரசு சமீபத்தில் இந்தியப் பள்ளிக் கல்வித்துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில் மாநில வாரியாக இந்திய பள்ளிகளின் நிலை, மாணவ / மாணவியர்களின் சேர்க்கை விகிதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், இடைநிற்றல் விகிதம், கழிப்பறை வசதி என பல்வேறு வகையான தகவல்கள் இருந்தன. அதில் இந்தியாவில் 22 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதியும், 30 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே கணினி வசதியும் உள்ளதென கூறப்பட்டுள்ளது. இந்தத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும், கல்வியின் தரத்திலும், சுகாதாரத்திலும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் செயல்பாடு குறித்து விரிவாக அலசினோம். அதன்முடிவில் நமக்கு தெரியவந்த தரவுகள் பற்றி இங்கு விரிவாக காணலாம். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 7,78,842 தொடக்கப் பள்ளிகள், 4,43,643 நடுநிலைப் பள்ளிகள், 1,51,489 உயர்நிலைப் பள்ளிகள், 1,33,734 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 15,07,708 பள்ளிகள் உள்ளன. அதி

TODAY'S THOUGHT..

ஒரு இருட்டு அறை... அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன. அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன. காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது. அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!! அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது. கூறியவுடன் அணைந்து விட்டது...!! இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது. என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!! இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது. அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்.... பின் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்

அரசுப் பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் பணி நியமனம்..? -கோடிட்டு காட்டிய அமைச்சர்!

  திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிட்ம் கூறியது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை19) வெளியிடப்பட்டுள்ளன. 22ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் 6 ஆயிரம் ஹைடெக் லேப் வசதிகள் உள்ளன. கொரோனா காலம் என்பதால் அதனை முழுமையாக ப.யன்படுத்த முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அந்த பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கொரோனோ சூழலை கருத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்

இன்றைய சிந்தனை..

 ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான். அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான். ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான். அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன். "அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர். ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?" என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி. தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பெரியகோவில்..

                 சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்.. கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள் பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல் இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர   கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்   எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.   ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்   4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்.. பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட   கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு   அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி ? Link Available

  12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnresults.nic.in https://www.dge1.tn.nic.in https://www.dge2.tn.nic.in https://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை, மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், 22-ம் தேதி காலை 11 மணி முதல்  http://www.dge.tn.gov.in ,  http://www.dge.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SUNDAY'S POSITIVE VIBES..

பிரபஞ்சத்தை இயக்கும் பேராற்றலே உம்மை சரணடைகிறோம்... பிரபஞ்சமே, உம்மை  வணங்குகிறோம். நம்பிக்கைதான்  வாழ்க்கை என்பதை முழுமையாக  நம்புகிறோம்.   ஆற்றலை  அளிக்கும் பிரபஞ்சத்திற்கு  நன்றி கூறுகிறோம். நன்றியுணர்வை சுவாசித்தலுக்கு  நிகராக உணர்கிறோம். அன்பு உணர்வை  ஆகப் பெரும் சொத்தாக அகத்தில் வைக்கிறோம். பஞ்ச பூதங்களின்  துணை எப்பொழுதும் இருக்கிறது  என நம்புகிறோம். விழிப்புணர்வு  எங்களைக் காக்கும்  என பகிர்கிறோம். "வாழ்க வையகம்  வாழ்க வையகம்"  என வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம். நல்லெண்ண  அலைகள் நம்பிக்கை தரும்  என உணர்கிறோம். வாழ்க வளமுடன்  வாழ்க வளமுடன் என்ற  மந்திரம் சொல்லி நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறோம். 'இதுவும் கடந்து போகும்"  என மனஉறுதி  கொள்கிறோம். "மகிழ்வித்து மகிழவே"  இப்பிறப்பு  என உணர்கிறோம். "மாறும்" என்பதும் "மாறிக்கொண்டே  இருக்கிறது" என்பதும் தெளிவாக  உணர்கிறோம். மனவுறுதியே  மாமருந்து  என அறிகிறோம். சங்கடங்கள் தீர சரணாகதியே சிறந்த வழியென சரணடைகிறோம். இறை நினைப்பே, உயிர் பிழைப்பு  என உணர்கிறோம். பய உணர்வை பக்தியால்  கரைக்க

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தேர்வையும் நடத்தாத நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த TRB எனப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. TRB தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் அந்த தேர்வுகளை மீண்டும் நடத்த ஆசியர் தேர்வு வாரியம் மீண்டும் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகவில்லை. அதைப்போல பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் TET, TRB ஆகிய தேர்வுகளும் நடத்தப்படவில்லை. மேலும் கல்லூரி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் SET தேர்வும் நடத்தப்படாமல் பல இடங்களில் உதவிப்பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுள்ளது.இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட மற்றும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்

CUP..

ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு! ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்த பேராசிரியர் அந்த மாணவிக்கு டியூஷன் எடுக்க முடிவெடுக்கிறார். முதல் நாள் வகுப்புக்கு செல்கிறார் அந்த மாணவி. ஐந்து நிமிடம் தாமதம். ஆசிரியர் கடிகாரத்தையும் அந்த மாணவியையும் மாறி மாறிப் பார்க்கிறார். ‘சாரி சார், என்னுடைய வாட்ச் ஐந்து நிமிடம் ஸ்லோ’ என காரணம் சொல்கிறாள். ‘முதலில் உன் வாட்ச்சில் சரியான நேரத்தை வைத்துக்கொள்… நீ ரேசில் கலந்துகொள்ள இருக்கிறாய். நேரம்தான் எல்லாவற்றுக்கும் மிக முக்கியம்’ என ஆங்கிலத்தில் அறிவுரை சொல்கிறார் அந்த பேராசிரியர். அந்த மாணவி தான் கொண்டு வந்திருந்த தடிதடியான புத்தகங்களை அவர் முன் உள்ள டேபிளில் வைத்துவிட்டு ‘சார், இந்த புத்தகமெல்லாம் போதுமா, வேறு ஏதாவது வேண்டுமா?’ என கேட்கிறாள். ‘இதெல்லாம் புத்தகங்கள் அல்ல. Guide. உன்னை கைட் செய்ய நான் இருக்கேன்…’ என  சொல்லிவிட்டு அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து அதை படித்துக்கொண்டு வர சொல்கிறார். அந்த பேப்பரைப் பார்த்த மாண

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு; அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

  அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு; அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இன்றைய சிந்தனை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்  அதுல பதிலை எழுதுங்க.  ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.  உங்களால முடியலேன்னா  அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா….  படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய  உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?  இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ  அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.  இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

    புதுவையில் வெள்ளிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருந்த நிலையில், நோய்த்தொற்று குறையாமல் உள்ளதால், பெற்றோரின் வேண்டுகோளை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பதாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் 9,10,11,12-ஆம் வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் ஜூலை 16ம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். கல்வித்துறையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுவதுமாக குறையாத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது நோய்த்தொற்றை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி பெற்றோர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை திடீரென துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்த கல்வித்துறை அமைச்சர். ஏ நமச்சிவாயம், துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று முழுமையாக குறையவில்லை. பெற்ற

TODAY'S THOUGHT..

 20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்... இது எப்படி சாத்தியம்..??? ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி??? அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்.. ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்... யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ... வேறு யாருமில்லை..  கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...  வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார். சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்... அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்... ""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்..."" இப்பொழுதும் அங்கே

TET சான்றிதழ் - OPS பரிந்துரை

 "TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும்" -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வேண்டுகோள்.

TODAY'S THOUGHT..

 நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக  10 பேர் நான் அமர்ந்திருந்த  டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக  உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான்  quick and better service... no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன். Waiter அமைதியாக  என்னிடம் கூறினார். Sir உங்களுடைய  order Very special  எங்களுக்கு. அதை எங்கள்  Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன்.  பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமாறினார்கள். V

NEWS ABOUT TET POSTING AND VALIDITY OF TET CERTIFICATE..

Education minister has said that necessary action will be taken regarding TET 2013.. Click the video for further clarification..