Skip to main content

Posts

Showing posts from July, 2019

கோபம்..

ஒரு பாம்பு அடுப்பாங்கறைகுள் தெரியாம வந்திடுச்சு... உள்ளே உள்ள பாத்திரங்கள்  மேல்  மெல்ல  ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு... உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான பொருளை கடிக்க ட்ரை பண்ணிச்சு... அது *கத்தி*.. இப்போ கத்தி அறுத்ததால்  அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது. பாம்புக்கு கோபம் தலைக்கேறி.... அந்த கத்தியை சுற்றி வளைத்து *கொல்லும்* நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது... தன் பலம் முழுவதையும் சேர்த்து..... என்ன ஆச்சு... முழு உடலும் கத்தியால்  வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது... என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு...!!!. இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து, 

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கினால் மட்டும் போதுமா? - முனைவர் மணி கணேசன்

கடந்த ஜூன் முதல்வாரம் முதற்கொண்டு தமிழகத்தில் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2381 அங்கன்வாடி மையங்கள் மழலையர் கல்வி மற்றும் முன்பருவக் கல்வி பழக்கும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இடைநிலை ஆசிரியர் ஒழிப்புப் பணியிடங்களில் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மூத்த பள்ளி இளையோரைப் பணியிறக்கம் செய்து முன்பருவக் கல்விப் பயிற்றுநராகக் கட்டாய மாற்றுப்பணி ஆணை வழங்கப்பெற்று பணிபுரிய பணித்துள்ளனர். இத்தகையோர் நிலை திரிசங்கு நரகமாக இருப்பது வேதனைக்குரியது. ஏனெனில், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் ஊதியம்; புதிய பள்ளியில் பணி செய்தல் என்னும் நிலையில் பள்ளி, மாணவர், ஆசிரியர் குறித்த முழுவிவரங்களை உள்ளடக்கிய கல்வி மேலாண்மைத் தகவல் தொகுப்பில் ( EMIS ) இத்தகையோர் குறித்து குழப்பநிலை நிலவுவது மறுப்பதற்கில்லை. ஏனெனில், புதிய பள்ளி ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும் அதேவேளையில் பழைய பள்ளி EMIS இல் இவர்களது விவரங்கள் இருப்பது பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும். ம

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர சி-டெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நிகழாண்டுக்கான சி-டெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 8- ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 21 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள். இந்தத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26-ஆம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்

TODAY'S THOUGHT..

புத்திசாலியாய் இருங்கள்...  முட்டாளாய் நடியுங்கள்.... வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். 🙏வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியவில்லை.  ஆனால் ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடும்.... 🙏வாழ்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,  வாழ்வதற்கு ஒரே காரணம்.... " நாளை எல்லாம் சரியாகிவிடும்"  என்ற நம்பிக்கை தான். 🙏வாய்க்காலில் நீரோட்டமும், வயலில் ஏரோட்டமும் சிறப்பாக இருந்தால் தான் வீதியில் தேரோட்டமும், வீட்டில் கொண்டாட்டமும் நிலையாக இருக்கும். 🙏 என்னை முட்டாள் என்று கூறினால் வருத்தப்படுவதில்லை.  முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற மாட்டான். 🙏 வாழும் வாழ்க்கை கொஞ்ச நாட்கள்தான்....! ( என்ன ஒரு அதிகபட்சம் 80 வயது எனக் கொள்வோமா / just 29000  நாட்களே....! ) வசதியாய் வாழாவிட்டாலும், பிறர் வாழ்த்தும்படி நிம்மதியாய் வாழ்ந்துவிட்டு போவோமே....! 🙏நூறு சொந்த வீடு இருந்தாலும் கடைசில "கூலர்  பாக்ஸ்" என்னமோ வாடைக்குத்தான் எடுக்கனும்.  பார்த்து நடந்துக்குங்க. நீங்கள் மன்னிப்பு கேட்கையில் - புனிதம் அடைகிறீர்கள் மன்னிப்பு தருகையில் -

பற்றாக்குறையாக உள்ள 2,400 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்!

''தமிழகத்தில், 2,400 ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.வேலுார், சத்துவாச்சாரியில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 1,248 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, தவறு. ஒரு மாணவர் கூட இல்லாத, 45 பள்ளிகளை, தற்காலிக நுாலகமாக மாற்றவும், அந்த பள்ளி ஆசிரியர்களை, அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட்டதும், அந்த பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை மூலம், மாணவ - மாணவியருக்கு காலணி வழங்கும் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதற்கு பதிலாக, 70 லட்சம் பேருக்கு, சாக்ஸ் மற்றும் ஷூ வழங்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.நடப்பாண்டில், 1 லட்சத்து, 68 ஆயிரத்து, 414 மாணவ - மாணவியர், அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டை விட, சேர்க்கை சதவீதம் கூடுதலாகி உள்ளது. தற்போது, 2,400 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும். நீண்ட காலமாக, ஆசிரியர்கள், கரும்பலகையில், சாக்பீஸால் எழுதி பாடம் நடத்துகின்றனர். விரைவில் இந்த முறை மாற்றப

Flash News :

TRB - Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - Tentative Key Answer Published!

யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரமின் மாத வருமானம் சுமார் ரூ.21 கோடியா?

தென் கொரியாவைச் சேர்ந்த யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரம் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என்றும், சியோலில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடும் வாங்கியுள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூ டியூப் நட்சத்திரம் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. ஒரு சேனலில், உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மதிப்பாய்வு கூறுவதுதான் இவருடைய பணி. அதற்காக 13.6 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். மற்றொன்று 17.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட வலைப்பதிவு. குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மழலை வார்த்தைகளால் இவர் கூறும் ரிவ்யூவை கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதாம். இவர் அனைவரது மனதிலும் யூ டியூப் நட்சத்திரமாகவே வளம் வருகிறார். இந்த சேனல்கள் மூலம் தென் கொரியாவில் மிகவும் பிரபலமான போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமானவர்கள். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர். இவரது பெற்றோர் தற்போது சியோல் பகுதியில்

அழிக்கபடும் அரசுபள்ளி....

மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிகள் நூலகமாக மாற்றபடும் செங்கோட்டையன்..... ஆசியாவிலே பெரிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள்.... ஆசியாவிலே பெரிய நூலகத்தை எந்தவொரு பராமரிப்பும் இன்றி மூடினீர்கள்... இப்போது மாணவர்கள் வருகை குறைவால் அரசுபள்ளிகளை நூலகமாக மாற்றபோகிறீர்கள் பள்ளிளை அழித்து நூலகமாக மாற்றினால் அங்கு யார்  படிக்கவருவார்கள்... சிறைச்சாலையை இடித்து நூலகங்களை கட்டுங்கள்... கோயில்களைகூட இடித்து பள்ளிகளை கட்டுங்கள் ஒரு மனிதனுக்கு பக்தியை சொல்லிகொடுப்பதைவிட படிப்பு கற்றுகொடுங்கள் இதுதான்  அமைச்சரே அவசியமானது.... நூலகமாக மாற்றுவதற்கு பதில் பேசாமல்  அரசு மதுபானகடையாக  மாற்றிவிடுங்கள் நூலகத்தில் படிக்கவருவதைவிட படிக்காதவர்கள் அதிகமாக குடிக்கவருவார்கள்..... அரசுக்கும் நிதி அதிகமாகும் பள்ளிகள் இருந்தால் ஆசிரியர்களை நியமிக்கணும் ஊதியம் கொடுக்கணும் படித்தால் அரசுவேலை கொடுக்கணும் படித்தவன் எவனும் கட்சி மாநாட்டுக்கு வரமாட்டார்கள் படித்துவிட்டால் நாடுமுன்னேறிவிடும் அது நடக்ககூடாது மாணவர்கள் இல்லாத பள்ளியை மூடுங்கள் ஆனால் ஒருபோதும் மாணவர்களை வரவழைப்பதற்கு என

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அசத்திய இந்திய பெண் விஞ்ஞானிகள்...!

நிலாவைக்காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம் மாறி இன்று ஆராய்ச்சிக்காக நிலவுக்கே விண்கலத்தை அனுப்பி அசத்தியுள்ளனர் நம் இந்தியப் பெண்கள். நிலவின் தெற்கு பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லை பதித்திருக்கிறது இஸ்ரோ. அத்துடன் இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள விண்கலம் என்ற பெருமையையும் சந்திரயான் 2 பெற்றிருக்கிறது. உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 30 சதவீத பெண்கள் பணியாற்றினாலும் கடந்த 5 ஆண்டுகளில் விண்கலன்களை உருவாக்கும் திட்டப்பணிகளில் வெறும் 15 சதவித பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 20 சதவீத பெண்கள் மட்டுமே பணியாற்றிக்கொண்டிருந்தாலும், விண்கலன் உருவாக்கத்தில் சுமார் 30 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி அசத்தியிருக்கிறது இஸ்ரோ. தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் -2 விண்கலனை உருவாக்கிய குழுவில் 30 சதவீதம் பெண்கள்தான் இடம்பிடித்துள்ளனர். அது மட்டுமின்றி சந்திரயான் 2 விண்கலன் உருவாக்கத்தில் திட்ட இயக்குனர்களே

பிரைவேட் ஸ்கூலில் இருந்து கவர்மெண்ட் ஸ்கூல்களுக்கு மாறிய 1 லட்சம் மாணவர்கள் !அசத்திய அரசுப் பள்ளிகள் !!

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதியவசதிகள் இல்லை எனவும், கல்வித் தரம் மந்தமாக இருப்பதாகவும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்குக் கல்வி பயில அனுப்புகின்றனர். அரசுத் துறை அதிகாரிகள் கூடத் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்குகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகமாக இருந்தாலும் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளை நோக்கியே பெற்றோர்கள் படையெடுக்கின்றனர்.இந்தப் பழக்கம் தற்போது மாறியுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாறியுள்ளனர். தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான கட்டணங்கள் ஒரு புறம் பயமுறுத்தினாலும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதும், ஆசிரியர்களின் உழைப்பும் மாணவர்கள் இடம் மாறுவதாகத் தலைமை ஆசிரியர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் கூறுகின்றனர்.2018-19ஆம் ஆண்டில் மொத்தம் 3.93 லட்சம்பேர் ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில் இந்த ஆண்டில் இரண்டாம் வ