Skip to main content

Posts

Showing posts from September, 2020

அரசுப் பள்ளிகளில் 16 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை : பள்ளிக்கல்வித்துறை தகவல்!

  நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர்

 பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

10,11,12 ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடத்தை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று சந்தேகம் கேட்க மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

  பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் சந்தேகம் கேட்க மட்டுமே வரலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் கோபி அருகே அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கூடம் திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.  10, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1ம் தேதி பள்ளிக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன்தான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என வருவாய்த்துறை மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் - ஸ்டாலின்

  மாணவ, மாணவியரின் எதிர்காலத்துடன், கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால், மற்றொரு புறம், அவசர கதியில் மாணவர்களை, பள்ளிக்கு வரச் சொல்லி, விபரீத விளையாட்டை, அரசு நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.  பத்தாம் வகுப்பு முதல், 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக, பள்ளிகளை, அக்., 1 முதல் திறக்க முடிவு செய்துள்ள, அரசு, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை, மிகக் கவனமாக முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதி செய்ய வேண்டும். கொரோனா எண்ணிக்கை, சென்னையில் மீண்டும் அதிகமாகும் நேரத்தில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது. எழுத்துப்பூர்வமாக, பெற்றோரிடம் அனுமதி பெற்றுத் தானே வந்தீர்கள் என, மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில், அலட்சியமாக இருந்து விடக்கூடாது.  அரசு, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், மாணவர்கள் ஒவ்வொருவரும், பள்ளிக்கு சென்று விட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-  பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. நாளை மறுதினம் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை செய்த பின் வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு பள்ளி திறப்பது குறித்து இறுதி முடிவை அறிவிப்பார்.

பள்ளிகளை திறப்பது எப்போது ? அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

தெரிவு செய்யப்பட்ட முதுகலை கணினி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ???

  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 824 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 01.03.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக ஜுன் மாதம் 23,27ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது நவம்பர் மாதம் 25 - ஆம் தேதி வெளியிட்டது. பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது ஜனவரி மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது ஜனவரி 11 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கணினி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாத சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக முதுகலை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் தடையாக இருந்த அனைத்து வழக்குகளும் 26.08.2020 அன்று முடித்து வைக்கப்பட்டு, முதுகலை கணினி ஆசிரியர்களை 16.09.2020க்குள் உடனடியாக நியமனம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மெத்தன போக

அக்.1-ம் தேதி பள்ளிகளில் 10,11,12 வகுப்புகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம் உள்ளே...

  அக்.10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் விருப்பத்தின்பேரில் வரலாம் என அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. பின்னர் தொடர் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் இறுதியாண்டுத்தவிர அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளை திறக்கவும், விருப்பமுள்ள மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9-ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அரசாணையில் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு: கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட 4-வது பொதுமுடக்கத் தளர்வு ஆணையில் 50% ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்றும்

மாணவர் சேர்க்கை, ஆசிரியர் காலியிடம் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு.

  எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நிலவரம் உட்பட, 20 வகை பணிகளுக்கான புள்ளி விபர பட்டியலை, நாளைக்குள் தாக்கல் செய்யும் படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவில்லை என்றாலும், மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூலிப்பது, ஆன்லைனில் பாடங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.  நடவடிக்கை அதேபோல, அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவது போன்றவையும் நடக்கின்றன.  இந்த வரிசையில், நடப்பு கல்வி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும், 28ம் தேதி, மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி களிடம் தகவல்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை

அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.

 தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஒருமாதமாக நடக்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் படித்து வந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தற்போது அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. 

பள்ளி திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் பேட்டி.

  இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:- தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நாட்டிலேயே கல்வியில் வியக்கத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது. நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும். 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளை திறக்கலாமா?: விரைவில் கருத்து கேட்பு!

  காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்டு, பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்புக்காக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது.  இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களின் விருப்பத்துடன், நேற்று முதல் பள்ளிகளில் வகுப்புகளை துவங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.அதன்படி, மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில், நேற்று முதல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது. வரும், 30ம் தேதி வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேநேரம், காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, பள்ளி திறப்புக்கான தேதியை முடிவு செய்ய அதிகாரிக

TET - சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்

  பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை.  ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நி

பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்: சூர்யா அறிக்கை

  'நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 'நீட்' தேர்வு அச்சம் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.  தமிழகத்தில் 14 நகரங்களில், 238 தேர்வு மையங்களில், 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுயில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசா

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன்

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துரை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் சுமார் 3800 மையங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்த உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வானது நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமி

TET 2013 தேர்ச்சி ஆசிரியர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று பணிக்கு செல்லலாம் - முதல்வர் !

                 அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் கூறி இருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.  வானூர் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு துவங்கப்படும் மாணவர் சேர்க்கையும் இந்தாண்டே நடத்தப்படும்.  ரூ.28 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றும் பணி துவங்கப்படும். நீட் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக்அரசின் நிலைப்பாடு.  நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டோம். அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை உயர்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார் . அரியர் தேர்வு தொடர்பான அரசின் அறிவிப்பு திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரியர் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே யுஜிசி விதிமுறைப் படிதான் நடப்போம் என தெளிவாக கூறி விட்டோம்.  பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும். கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப

அரசு பள்ளிகளில் 20 ஆண்டில் இல்லாத சேர்க்கை காரணமாக ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும் - தினமலர் செய்தி