Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு சன்னியாசி.. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள்.  எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து. இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை. 


அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.


 உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார்.


உடனே அந்த சந்நியாசி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார். ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன் மேலே ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நிறைய பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.


 இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறது யார் இவர் என்று கேட்டார் சந்நியாசி.


ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அவர் அந்த மதத்தின் தலைவர். அவரை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டம் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று விவரம் சொன்னார்கள்.


 இவர்களுக்கு அடுத்தபடியாக இன்னொரு குதிரையிலே ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் ஏகப்பட்ட கூட்டம். 


இவர் யார் என்று கேட்டார் சந்நியாசி. இன்னொரு மதத்தின் பெயரைச் சொல்லி இவர் அந்த மதத்தின் தலைவர். அவர் வழியை பின்பற்றுகிறவர்கள் அவர் பின்னால் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.


 இப்படி ஒவ்வொருவராக குதிரை மீது வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின்பற்றியும் ஒவ்வொரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. அந்த பெரிய ஊர்வலம் போய்க்கொண்டே இருந்தது. கடைசியாக அது முடிந்து விட்டது .அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான ஆள் குதிரைமேல் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பின்னால் யாருமே இல்லை. அவர் தனியாக வந்து கொண்டிருந்தார். அவர் அந்த ஊர்வலத்தை சேர்ந்தவரா என்றே தெரியவில்லை. 


இவர் யார் இவர் ஏன் இப்படி தனியாக போய்க்கொண்டு இருக்கிறார் என்று கேட்டார் அந்த சன்னியாசி. 


என்ன இப்படி கேட்கிறீர்கள்? இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள். முன்னால் போகிற ஊர்வலம் எல்லாம் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான் அப்படி என்றார்.


 இதை கேட்டதும் அந்த சந்நியாசிக்கு தூக்கி வாரிப்போட்டது . இதுவரைக்கும் கனவு கண்டு கொண்டிருந்தவர் முழித்துக் கொண்டார். அதன் பிறகு யோசித்துப் பார்த்தார்.


உண்மைதான் மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்திலே போவதாக நினைத்துக் கொண்டு பாதை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடவுளை பின்பற்றுவதாக நினைக்கிறார்கள்  ஆனால் கடவுளுக்கு பின்னால் யாருமே இல்லை.


இன்னும் இயல்பாக இதைப்பற்றி யோசித்துப்பார்த்தால் உண்மைக்குப் பின்னால்தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் அந்த உண்மை அனாதையாய் போய்க் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஆகிவிட்டது இந்த உலகம்..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Shajitha Mam..

    Rendu admit card nu theriyum, but neriya perukku first admit card kuda download agave illa.. Namma revathi sis kuda solitu irundhanga, nethu nyt dhan district admit card ae download acham..

    Sariyana kolarpadi indha trb..

    ReplyDelete
  3. Pg English ku admit card vanthurucha???

    ReplyDelete
  4. Tamilku admit card 2 vanthuducha

    ReplyDelete
    Replies
    1. Day before night and yesterday mrng vanthuruchu mam

      Delete
  5. Ss mam surver problem today morning tha vanthuchi.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..