Skip to main content

படித்ததில் பிடித்தது..

ஒரு விமானத்தில் தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,,

உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா? பயணம் சுவாரசியமாக இருக்கும் " என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு "என்ன மாதிரி கேள்விகள்?"
என்று சிறுமி கேட்டாள்.

கடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன?" என்றார்.

அந்த சிறுமி யோசித்து விட்டு "நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா? " என்றாள்.
புன்சிரிப்போடு  "அவர் தாராளமாக " என்றார்.

ஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவிற்கு சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி?" என்று கேட்டாள்.

தத்துவவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார்.
தெரியவில்லையே,,, " என்று கூறினார்.
இது கூட உங்களுக்கு தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும், இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்?

You dont know even about shit,,why you are bothering about God? என்று கேட்டாள்.
சிறுமியின் புத்திசாலித்தனத்தால், தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்.
எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.

தலைக்கனமும் கூடாது.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.   Known is a drop, unknown is an ocean.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் திறமை வாய்ந்தவர்கள் தான்.நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கணத்துடன் இருந்தால் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடும் இது தான் இயற்கையின் நியதி.
ஆதலால் தலைக்கணத்தை இறக்கி வையுங்கள் எப்போதுமே மகிழ்ச்சியுடன்  வாழ முடியும்.......


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Hi madam. Pg trb exam eruka ilaya mam????

    ReplyDelete
    Replies
    1. Kandippa iruku, corona situation adhanala thalli pogalam but kandippa exam nadakkum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...