பால்காரர் ஒருவர் தன் *பசுவை ஓட்டிக் கொண்டு* சாலையோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த *பசு திடீரென அடம்பிடித்து நடு சாலையில் அமர்ந்து கொண்டது.*
அகலம் குறைந்த அந்த சாலையில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுசாலையில் படுத்திருந்தது.
*பால்காரர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.*
அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்.
*தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார்.
பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார்.
பசு அசையவில்லை.*
அப்போது ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.
நகராமல் நின்ற *பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.*
மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.
ஒரு பசுவை சாலையிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்.
*மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை.*
*அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான். அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான்.
பசு புல்லை சாப்பிட எழுந்தது.*
*சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
பசுவும் அவனோடு நகர்ந்தது.*
தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்.
சிலர் மட்டுமே அந்த இடத்தில் இருந்து தீர்வு காண்கிறார்கள்.
பிரச்னையை அதன் கண்கொண்டு பார்க்க கற்றவர் வெற்றி பெறுவார்கள்.
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteTet postings pathi ethum information therinthatha mam, pg exam date eppo soluvangamam
ReplyDeleteSasi sir..
DeleteEnaku therinju tet posting ipodhaikku chance illa..
Pg trb indha month end kula date therinjurum..
Ella monthum kadanthu poguthu but nammaluku mattum entha solutionum kidaikamattanguthu, Enna lifenu theriyala mam remba kastama iruku
ReplyDeleteஜனவரி மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது.... கவலை கொள்ளாதீர்கள் நண்பர்களே...
ReplyDelete😃😃😃
DeleteMr unknown is it true heartful thanks to you
ReplyDelete