Skip to main content

TODAY'S THOUGHT..

சிலர் பேசும் போது மத்தவங்களுக்குப் புரியுதா? புரியலையா? அப்படிங்கறதப் பத்தியெல்லாம் கவலைப்படாம படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.


இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தரும். அதனால, அவங்க கேட்பதைப் பாதியிலேயே நிறுத்திடுவாங்க. 


அதனால, மத்தவங்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேசணும். அப்ப தான் நமது பேச்சை விரும்பிக் கேட்பாங்க.


ஒரு தலைச்சிறந்த ஆன்மீகப் பேச்சாளர் இருந்தார்..பல பட்டங்கள் பெற்றவர்.. தத்துவங்களை கரைத்துக் குடித்தவர்..


அவரை ஒரு ஊரில் சொற்பொழிவு ஆற்ற  கூப்பிட்டு இருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் அவரிடம் சொல்லி இருந்தார்கள்.


அவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரர் சென்றிருந்தார். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. 


கூட்டம் ரத்து ஆகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்று விட்டார்கள். பேச்சாளர் வந்த போது அங்கே யாருமே இல்லை.


பேசறதுக்காக நிறையத் தயார் செய்து வந்த பேச்சாளருக்கு பெருத்த ஏமாற்றம்..


இருக்கிற குதிரைக்காரருக்காக மட்டும் பேசலாம் என்றால் மனசு இல்லை.'குதிரை வண்டிக்காரரைப் பார்த்து ''என்னப்பா செய்யலாம்?’னு கேட்டார்.


அய்யா! நான் குதிரைக்காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். 


புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும் தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. 


நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.


செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது அவருக்கு.. அந்தக் குதிரைக்காரருக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டு விட்டு, அவனுக்கு மட்டும் தன் பேச்சை ஆரம்பித்தார்.


தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப்படுத்தினார் அந்தப் பேச்சாளர்...


பேச்சு முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவரைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்...


அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரை மட்டும் இருந்தால் , நான் அதுக்கு மட்டும் தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.


அவ்வளவு தான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது அந்தப் பேச்சாளருக்கு..


இவங்க இன்னும் கொஞ்சம் பேச மாட்டாங்களா, என்ற உணர்வினை நமது பேச்சைக் கேட்பவருக்குத் 

தோற்றுவிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தான் நாம் பேசும் பேச்சின் வெற்றிக்கு அடிப்படை..


*மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ, அதை மட்டும் சொன்னால் போதும்.*

*புரியாத, தேவை இல்லாத செய்திகளை மெனக்கெட்டு சொல்வது நம்மைத் தான் முட்டாளாக்கும்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வயது வரம்பு மாறுமா

    ReplyDelete
  3. வயது வரம்பு மாறுவது சாத்தியம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. நீ 45 க்கு கீழா??????????😁😁😁😁😁😁😁😁😁அப்படித்தான் யோசிப்ப

      Delete
    2. 45 வயது உள்ள எங்களை நினைத்து கருத்துக்கள் பதிவிடவும்

      Delete
    3. நான் எதார்த்தை சொன்னேன். காலம் வரும்போது உங்களுக்கு புரியும்

      Delete
    4. மாற்றம் ஒன்றே மாறாதது

      Delete
  4. இன்னுமா பொய்த்தமொழியை நம்பிகிட்டு இருக்கிங்க

    ReplyDelete
  5. ADMIN SIS.

    பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் Postal address சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. Pgtrb Notification ல் விளக்கம் கேட்டு யாருக்கு மனு அனுப்பலாம்

      Delete
    2. https://www.tn.gov.in/schedu/contacts.htm

      Delete
    3. Indha link la address iruku..

      Delete
  6. No Use Posting என்பது அரசின் Idea வில் இல்லை. நம்புங்கள் ஏமாற வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அது டெட்க்கு பீஜி நிச்சயமாக வரும்

      Delete
  7. கண்டிப்பாக 45 வயது
    அரசாணை ரத்தாகும் .wait and watch

    ReplyDelete
    Replies
    1. ரத்தாக வாய்ப்பில்லை

      Delete
    2. அதை உனக்கு என்ன கஷ்டம்

      Delete
    3. என்னுடைய கணிப்பு படி

      போஸ்டிங் போடுறாங்களோ இல்லையோ....


      ஆனால்


      # வயது வரம்பு அரசாணை .. ரத்து செய்யப்படும்..

      # போட்டி தேர்வு அரசாணையும் .. ரத்து செய்யப்படும்...

      பொருத்திருந்து பாருங்கள்...

      நல்லதே நடக்கும்..

      Delete
  8. எனது கணிப்பு . நிச்சயமாக posting போடுவார்கள். 2023 ஜனவரி யில். வயது வரம்பு அரசாணை ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இல்லை.. நியமன தேர்வு நடைபெறும். காத்திருப்போம்.. எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
    Replies
    1. Konja nal munnadi niyamana thervu varathunu sonnenga nanbare ippo varum nu solreenga

      Delete
    2. 2023 na 10years complete agidum so sad parpom

      Delete
  9. உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை Pg tRB வராது... அதன்பிறகு தான் pgtrb .... .

    ReplyDelete
    Replies
    1. 9district Mattum than so doesn't matter that age problem than main reason nu ninaikiren so seekiram notification varum but exam than delay agum bcos corona third wave

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..