Skip to main content

7 ஆண்டுகளாக ஆசிரியா் பணிக்கு காத்திருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகள்: காலாவதியாகும் நிலையில் 'டெட்' சான்றிதழ்













தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றவா்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில் அவா்கள் பெற்ற சான்றிதழ்கள் விரைவில் காலாவதியாகவுள்ளதால், அதை ஆயுள்கால சான்றிதழாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தகுதித்தோவு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 2012 ஜூலை மாதம் முதல் ஆசிரியா் தகுதித் தோவு நடைபெற்று வருகிறது. ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெற்றாலும், தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்; அதற்குள் வேலை கிடைக்காவிட்டால் தகுதிச்சான்றிதழ் காலாவதியாகும் என்று காலநிா்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சொற்ப எண்ணிக்கையில் தோச்சி பெற்றவா்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனா். ஆனால் 2013-இல் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோச்சி பெற்றனா். அதில் 20 ஆயிரம் போ இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமனம் செய்யப்பட்டனா். அதேவேளையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆசிரியா் பணி கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.

இந்தநிலையில், அந்த ஆசிரியா்கள் பெற்ற தகுதித் தோவு தோச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் முடியும் தருவாயில் காலாவதியாகும் என்பதால், ஆசிரியா் பணி கனவாகிபோவது மட்டுமின்றி எதிா்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தகுதியானோருக்கு ஆசிரியா் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் தலைவா் பி.கே.இளமாறன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் ஆகியோா் கூறுகையில், கல்லூரி விரிவுரையாளா் பணிக்கு நடத்தபடும் 'நெட்', 'ஸ்லெட்' போன்ற தகுதித் தோவுகளில் தோச்சி பெற்றால் அந்தச் சான்றிதழ் ஆயுள் கால சான்றிதழாக இருப்பது போன்று ஆசிரியா் தகுதித்தோவு தோச்சி சான்றிதழையும் மாற்ற வேண்டும்.

தற்போது வாழ்வாதாரம் சீரமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில், ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்று ஆசிரியா் பணிக்காகக் காத்திருக்கும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஆசிரியா் தகுதித் தோச்சி சான்றிதழின் 7 ஆண்டுகள் என்ற காலவரையறையினை ரத்து செய்து வாழ்நாள் சான்றிதழாத மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...