Skip to main content

அப்துல் கலாம்..

டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் தரிசனம் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதி எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.

திருமலை ஏழுமலையான் ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அவரை ஆலயத்துக்குள்
வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.

அனைத்து வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட அப்துல் கலாம், ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தார். மீண்டும் அழைத்தார்கள். இன்னும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்டு நுழையும் அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும். அதுதான் உங்கள் ஆலயத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் விதி. இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன். எங்கே அந்தப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள். நான் கையெழுத்திட வேண்டும். "என்றார்.

கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர்.

'இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும் " என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் "பங்காரு வாகிலி " எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது. வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.

மற்ற ஆலயங்களைப்போல் திருமலையில் பெருமாளுக்குச் சார்த்திய மாலைகள் வேறு எவருக்கும் சார்த்தப்படுவதில்லை. காரணம், இந்த மலர்களும், மாலைகளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பிறகு பெருமாளுக்குக் கொடுத்தவையாக ஐதீகம். எனவே பெருமாளுக்கு மட்டுமே அந்த மலர் மாலைகள் சொந்தம். இதன் காரணமாக, திருப்பதிக்கு வரும் எப்பேர்ப்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் சகல கவனிப்பு இருக்குமே தவிர, மாலை மரியாதை மட்டும் இருக்காது.

வலம் வந்து முடித்த அப்துல் கலாம் அவர்களுக்கு, அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், என்றெல்லாம் பிரசாதங்களை வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.

அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, "
"தனிப்பட்ட முறையில் என் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டாம்.இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். சகல வளங்களைப் பெற வேண்டும்!  என்று அர்ச்சனை செய்து ,வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள் " என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்.

எப்பேர்பட்ட உயரிய சிந்தனை அப்துல் கலாம் மனதுக்குள் இருந்தால் "இந்தியா " என்றபெயரை உச்சரித்து பிரசாதம் தாருங்கள் என்று கேட்டிருப்பார்!  வளர்க அவரது புகழ்!!👆👆👆

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...