என்னிடம் ஒரு கைத்துப்பாக்கியும் மூன்று குண்டுகளும் இருந்தன... முதல் குண்டை என் அப்பாவின் நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்... நெற்றியைத் துளைத்து மூளையைக் குடைந்து பின் மண்டையைப் பொத்தலிட்டு குருதியோடு சிதறி அவரின் கண்கள் பிதுங்க என் கண்களை உற்று நோக்கியே சரிந்தார்... இரண்டாம் குண்டை என் அம்மாவின் நெஞ்சில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினேன்... இதயத்தைத் துளைத்து முதுகின் வழியாய் பொத்தலிட்டு இதயத்தின் திசுக்களோடு ஒட்டிக் கொண்டு அவள் சரிய விரல்களால் என் கையை தடவியப்படியே சரிந்தாள்.. மூன்றாம் குண்டை என் நாவு நனைக்கும் உமிழ்நீர் எச்சிலோடு துப்பாக்கியின் குழலை உள்ளீட்டு ஒரு அழுத்து அழுத்தினேன்... என்னுடைய பின் மண்டையோட்டின் வழியாக துளைப்பதற்கு முன் மூளையின் கடைசிப் பதிவான " அம்மா " வென அலறியே சரிந்தேன்... இரண்டுக் கொலையும் ஒரு தற்கொலையும் நடந்தேறியது... நான் சுட்ட முதல் குண்டின் பெயர் " சொல் கேளாமை"... நான் சுட்ட இரண்டாம் குண்டின் பெயர் " தாய்பாசம் அறியாமை" ... நான் சுட்ட மூன்றாம் குண்டின் பெயர் " சுயமதிப்பை உணராமை"... நான் வைத்திருந்த கைத்துப்...