Skip to main content

புல்லாங்குழல்..

 ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் தன் கையில் ஒரு புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது நாம் அறிந்ததே; அதற்குப் பின் ஒரு பெரிய கதை இருக்கிறது.

கிருஷ்ணர் தினந்தோறும் தோட்டத்திற்குச் சென்று எல்லா செடி கொடிகளிடமும், “நான் உங்களை நேசிக்கிறேன்” எனக் கூறுவார்.

செடிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து “நாங்களும் உங்களை விரும்புகிறோம்” எனக் கூறுவதுண்டு.

ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றுக் கலவரத்துடன் அவசரமாகத் தோட்டத்திற்குள் நுழைந்தார். மூங்கில் செடியிடம் அவர் நேராகச் சென்றார்.

மூங்கில் செடியும் அவரிடம், “என்னவாயிற்று? ஏன் கலவரமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டது. அதற்குக் கிருஷ்ணர், “எனக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டும்;
ஆனால் அது மிகவும் கஷ்டமானது” எனக் கூறினார்.

மூங்கில் செடியும், “எதுவானாலும் கொடுக்கத் தயார்” என பதில் கூறியது. உடனே கிருஷ்ணர், “எனக்கு உன் உயிர் வேண்டும்.

அதற்கு நான் உன்னை வெட்ட வேண்டும்” என்றார். மூங்கில் சற்று நேரம் யோசித்த பின், “வேறு வழி ஏதும் இல்லையா?” எனக் கேட்டது.

கிருஷ்ணர் வேறு வழி இல்லை என்றதும், மூங்கில் சரணாகதி அடைந்து தன்னை அர்ப்பணித்தது.

கிருஷ்ணர் மூங்கிலை வெட்டி, அதனுள் துளைகள் செய்தார். வலி தாங்க முடியாமல், மூங்கில் அழுது கொண்டே சகித்துக் கொண்டது.

எல்லா வேதனைகளையும், வலிகளையும் சகித்த பின், ஒரு அழகான புல்லாங்குழலாக மாறிற்று.

இந்தக் குழலை ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும், 24 மணி நேரமும் தன்னிடமே வைத்திருந்தார்.

கோபியர்கள் இதைக் கண்டு பொறாமை அடைந்தனர். அவர்கள் புல்லாங்குழலிடம், “கிருஷ்ணர் எங்கள் கடவுள்; ஆனால் எங்களுக்கு அவருடன் சிறிது சமயம் தான் கழிக்க முடிகிறது.

ஆனால் அவர் உன்னுடன் தூங்கி, எழுந்து, எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறார்” எனக் கூறினார்கள்; ஒரு நாள் புல்லாங்குழலிடம் அந்த ரகசியத்தைக் கேட்டனர்.

புல்லாங்குழல், “எனக்குள் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியம். கடவுள் என்னை என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்” எனக் கூறியது.

இது தான் பூரண சரணாகதி. கடவுள் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு, நாம் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

உண்மையில் “நான்” என்பது என்ன? எல்லாமே அவரே ஆகும்.

நீதி:
நமக்கு எது நல்லது எனக் கடவுளுக்குத் தான் தெரியும். அவர் நமக்காகத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார். நம் காரியத்தை நாம் சிறந்த முறையில் செய்து, மற்றவை அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட வேண்டும். நம் பார்வை வரையறுக்கப் பட்டது.
பின்னால் எல்லாம் நம் நன்மைக்கே என உணராமல், சோதனைகளை எதிர்கொள்ள பயப்படுகிறோம்.

கடவுளிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவர் நம்மை ஏற்று, எப்பொழுதும் நல்லதையே செய்வார்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழியாரே...
      I convey my gratitude for ur optimistic comments and posts...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Gudmrng Raj brother..

      I have always believed in positive hopes and am sure it will motivate people.. Keep in touch brother..

      Delete
    4. Tq...Sometimes it heals the wounded hearts..

      Delete
    5. Oh yes thats the hidden purpose of posting stories..🙏🙂

      Delete
    6. Goodmorning dear admin mam very nice story

      Delete
  2. Kathai unmai.athai Pola 2013 ku kadavul ippo nallathu Panna ninaikiral I mean posting poda vaika pogirar

    ReplyDelete
    Replies
    1. 2013 💚❤💔💔
      போடுடா வெடிய💐💐💐💐💐💐💐💐💐

      Delete
    2. ரொம்ப ஆடாதிங்க trt வரப்போகுது அதுக்கு தான் இந்த லைப் டைம் வேலிடிட்டி

      Delete
    3. கூடிய விரைவில் போட்டி தேர்வு அறிவிப்பு வெளியாகும். பணி இடங்கள் குறைவாக உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக பணியில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு காலி பணி இடங்களை நிரப்ப முடிவு

      Delete
    4. இன்னும் சில வாரங்களில் சிலபஸ் வெளியிடப்படும்

      Delete
    5. தாங்கள் கூறியது போல்
      போட்டித்தேர்வு விரைவில் எனில் அதன்
      SYLLABUS தயார் நிலையில் உள்ளதா?
      செய்திகளை உடனே உடனே இங்கு பதிவிட வேண்டும்
      நன்றி

      Delete
    6. வெங்கடேசன் நண்பரே பணியிடங்கள் குறைவு எனில் எவ்வளவு இருக்கும் என எதாயினும் கனிப்பு உள்ளதா?

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. சிலபஸ் பற்றிய தகவல் தெரிந்தாலும் கூறவும்

      Delete
    9. Venkatesan sir please share informations here. When can we expect the syllabus

      Delete
    10. UG சிலபஸ் தான் வருமா சார்

      Delete
    11. ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா ஆனால் போஸ்டிங் மட்டும் போட்ருங்க

      Delete
    12. விரைவில் தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டால் நன்று....

      Delete
  3. Good morning Mam,
    நான் 2013 TET Paper- 1 pass பண்ணத 2020 la employment register பண்ணே. அப்போ print எடுக்கும் போது TET passed இருந்துச்சு. இப்ப June- ல Renewal பண்ணிட்டு print எடுக்கும் போது அந்த இடத்துத்துல TET - Paper 2 nu இருக்கு. ஆனா நான் Paper-1 ல தான் Pass. என்ன பண்றது mam.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Aj sir/mam..

      Nothing to worry, rendu copy yum kaila vachukonga.. Entry level la edhum mistake achanu matum one time confirm panikonga.. Other than that make sure to have both the copies..

      Delete
    2. Okay mam..edit panna mudiyatha....

      Delete
    3. Usually editing option kastam dhan, but try panni paarunga. Apdi illanalum paravala palaya copy and new copy rendum vachukonga.. This won't be an issue, don't worry..

      Delete
  4. வரும் முன் காப்பது நன்று.

    TRT வரும் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த LINK இல் சென்று MODEL TRT SYLLABUS பார்க்கவும்.

    PAPER 1:

    https://youtu.be/JnMXWxte6_Q

    PAPER 2:

    https://youtu.be/7PoZQAZOWxo


    மேலும் அனைத்து நம் நண்பர்களும்

    மாணவர் :ஆசிரியர் விகிதாசாரம்

    25:1

    என அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டும்.

    இதனால் காலிப்பணியிடம் அதிகமாகும் .நம்மில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. காலிபணியிடமே இல்லனு சொல்ராங்களே

      Delete
    2. Muniyappan sir..

      30:1 vandhale podhum, nalla chances irukkum.. Let's wait and see..

      Delete
    3. கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

      மத்திய அரசு நமக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என நம்புகிறேன் .

      தாங்கள் கூறியது போல் 30:1
      வந்தாலும் நல்லது .

      Delete
    4. Lets hope for the best to happen sir..

      Delete
    5. நல்ல நேரம் வந்துட்டா தன்னால எல்லாம் நல்லதா நடக்கும்

      Delete
  5. good morning admin mam minister a pakkumbothu 30:1 mension pannunga mam

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Jonah mam..

      Minister ah paakumbothu 1min to 5mins dhan allow pannuvanga, so petition la perfect ah eludhi, short ah avarta solra madhiri paathukanum. Andha gap la tet pathi pesavae sariya irukum, irundhalum try panuvom mam..

      Delete
  6. என்னது TRT தான் வரப்போகுதா

    ReplyDelete
  7. Shanmugam sir do you know anything about trt and its syllabus?

    ReplyDelete
  8. ஏதோ நல்லது நடக்கும்னு தோணுது. யாருக்கும் பாதகம் இல்லாம நல்லது நடக்கணும்

    ReplyDelete
    Replies
    1. நடக்கும் சிஸ்டர் இனிமே டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி தான் நமக்கு எல்லாம்

      Delete
    2. துணை பேராசிரியர் நியமன வழிகாட்டுதல் படி NET, SET, தேர்ச்சி பெற வேண்டும், இதே முறை படி தான் tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எதிர்பாக்கலாம்

      Delete
    3. அதாவது trt வரும்னு சொல்றிங்களா

      Delete
    4. Unknown sir ,endha murai varum endru solukeerigal?

      Delete
    5. இதே முறை படி அது என்ன முறை சார்

      Delete
    6. Admin madam அவர்களிடம் கேளுங்கள், துணை பேராசிரியர்கள் எப்படி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று

      Delete
    7. NET, SET பேராசிரியர்க்கு, அது போல தான் நமக்கு TET, வேற என்ன மெத்தெட் சார்

      Delete
  9. Replies
    1. Yessssssssssssssss trt

      Delete
    2. Nooooooooooooo. Trt

      Delete
    3. Yessssssssssssssssssssssssssssssssssssssssssssssssss TRT

      Delete
    4. Vanga senkotta ingaum vanthuttingala😁😁😅

      Delete
    5. Tet vaikkuratha iruntha announcement vanthu 3 years a va syllabus seach pannitu irukkanga DMK government admk trt nu sonnappa atha appose pannavanga avanga epdi trt venum nu solluvanga


      Tet mark+employment seniority padi pottal High mark with senior teacher select avanga Ella year um combine panni job kidaikkum

      Delete
    6. Pora pokkula ishtathukku adichu vidathinga.. Eppi DMK trt ku oppose pannanga, weightage nala affect ana 2013ku job undunu sonanga avanga therthal arikkaila kuda adhan iruku, trt pathi avanga edhum pesala..

      Stop spreading rumors..

      Delete
    7. விடுங்க மேடம் அவங்களுக்கு வேற வேல இருந்த தான

      Delete
  10. Mam evlo posting poda vaippu irukku mam exspeclly maths

    ReplyDelete
    Replies
    1. 2013la 900 potanga.. Almost 7years poiruchu maximum 500 achum irukalam, idhu enoda guess dhan..

      Delete
  11. கடைசியா trt தான் வரப்போகுதா

    ReplyDelete
  12. 2013 Group met minister today.
    💚❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பிச்சுட்டிங்களா

      Delete
  13. Friends..

    I have requested my frnd working in puthiya thalaimurai to ask education minister about tet posting.. Anybody want to send short and crisp questions you can comment here.. I'll send him that in voice note..

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு கேள்வி அட்மின் மேடம்.

      *இதுவரை TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி எந்த முறைப்படி வழங்கப்படும் என்பதை G.O மூலமாக எப்பொழுது அறிவிப்பீர்கள் ?

      Delete
    2. Sure sir, inform panirkaen..

      Delete
    3. Enna Da nadakuthu admin than trb kum admin ah

      Delete
    4. Munniyappan கலாய்ங்கிறாரா???😁😁😁😁😁😁

      Delete
    5. முட்டாள் மூதேவிகளா முனியப்பன் எதுக்கு கலாய்க்கனும்? அட்மின் மேடம் பிரண்ட் புதிய தலைமுறை டிவி சேனலில் வேலை பாக்குறார் அவரும் டெட் கேண்டிடேட். பல முறை செங்கோட்டையன் கிட்ட அடிக்கடி டெட் பத்தி கேட்டது அவர் இருந்ததால தான், எத்தனையோ டைம் அட்மின் மேடம் சொல்லி அவரும் கேட்ருக்கார். எப்பவும் புதிய தலைமுறை டிவில டெட் பற்றிய நியூஸ் வந்ததுக்கு காரணமும் அதான். வந்துட்டிங்க துப்பு கெட்ட ஈதரைங்க.

      Delete
  14. நல்ல முயற்சி மேடம். நீங்க யாரோ எவரோ எப்பவுமே ரொம்ப உதவி செய்ரிங்க. நன்றி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. Naanum tet candidate dhan mam, unga vali enakum theriyum..

      Delete
  15. 100℅ஆசிாியா்தேர்வு வாரியம் டிஎன்பிஎஸ்சி ௨டன்இனைக்கப்படமாட்டாது ௭ன ௨றுதியான தகவல்

    ReplyDelete
  16. நல்ல தகவல்

    ReplyDelete
  17. ஆசிரியர் தேர்வு வாரியத்தை
    TNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை

    ReplyDelete
  18. Athu theriyum sir .ithaiye 3years ku munnadi kooda sonnanga but drop it

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here