Skip to main content

CUP..


ஏபிசிடி-யிலும் ஒரு டீ கப்பிலும்தான் வெற்றி இருக்கு!


ஒரு சிறிய ஊர். ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். ஒரு மாணவி. ஐஐடி-யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். அவளுடைய படிப்பு ஆர்வத்துக்கு உதவுவதற்காக அந்த பேராசிரியர் அந்த மாணவிக்கு டியூஷன் எடுக்க முடிவெடுக்கிறார்.


முதல் நாள் வகுப்புக்கு செல்கிறார் அந்த மாணவி. ஐந்து நிமிடம் தாமதம். ஆசிரியர் கடிகாரத்தையும் அந்த மாணவியையும் மாறி மாறிப் பார்க்கிறார்.


‘சாரி சார், என்னுடைய வாட்ச் ஐந்து நிமிடம் ஸ்லோ’ என காரணம் சொல்கிறாள்.


‘முதலில் உன் வாட்ச்சில் சரியான நேரத்தை வைத்துக்கொள்… நீ ரேசில் கலந்துகொள்ள இருக்கிறாய். நேரம்தான் எல்லாவற்றுக்கும் மிக முக்கியம்’ என ஆங்கிலத்தில் அறிவுரை சொல்கிறார் அந்த பேராசிரியர்.


அந்த மாணவி தான் கொண்டு வந்திருந்த தடிதடியான புத்தகங்களை அவர் முன் உள்ள டேபிளில் வைத்துவிட்டு ‘சார், இந்த புத்தகமெல்லாம் போதுமா, வேறு ஏதாவது வேண்டுமா?’ என கேட்கிறாள்.


‘இதெல்லாம் புத்தகங்கள் அல்ல. Guide. உன்னை கைட் செய்ய நான் இருக்கேன்…’ என  சொல்லிவிட்டு அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து அதை படித்துக்கொண்டு வர சொல்கிறார்.


அந்த பேப்பரைப் பார்த்த மாணவிக்கு முகத்தில் ஆச்சர்யம். அதில் A முதல் Z வரை பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதி இருந்தது. ‘சார், ஏபிசிடி தானே சார், எனக்கு நல்லா தெரியும்’ என சொன்ன மாணவியை பார்த்து அந்தப் பேராசிரியர் ‘நான் சொல்வதை செய்’ என ஆங்கிலத்தில் சொல்கிறார்.


அவள் வீட்டுக்கு வந்ததும் அவள் தோழிக்கு போன் செய்கிறாள். தோழியிடம்  ‘அந்த ஆசிரியர் சரியான காமெடி பேர்வழி’ என சொல்லி தன்னை ஏபிசிடி படித்து வரச் சொல்லி இருக்கிறார் என கிண்டலாக சொல்கிறாள்.


அடுத்தநாள் மிக உற்சாகத்துடன் வகுப்புக்கு சரியான நேரத்துக்குச் செல்கிறாள். அந்தப் பேராசிரியர் அவளிடம் ஏபிசிடி-யில் இருந்தே கேள்விகளைக் கேட்கிறார்.


‘ஏபிசிடி- சொல்லு…’


மாணவி மிக உற்சாகத்துடன் சொல்கிறாள்.


‘Z – ல் இருந்து சொல்லு…’


மாணவி அதே உற்சாகத்துடன் சொல்கிறாள்.


‘முதல் எழுத்து என்ன?’


மாணவி ‘A’ என்கிறாள்.


‘26-வது எழுத்து என்ன?’


மாணவி ‘Z’ என்கிறாள்.


’17-வது எழுத்து என்ன?’


மாணவி இப்போது கொஞ்சம் குழப்பத்துடன் விரல்களைவிட்டு எண்ணி ‘Q’ என்கிறாள்.


’12-வது எழுத்து என்ன?’


இப்போது மாணவி இன்னும் சற்று குழப்பமாகி விரல்களின் துணையுடன் எண்ண ஆரம்பிக்கிறாள்.


அந்தப் பேராசிரியர் அவளை முடிக்க விடவில்லை. ‘எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்… இன்னிக்குப் போய் நன்றாக கான்சண்டிரேட் செய்து படிச்சுட்டு நாளைக்கு வா…’ என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார்.


அந்த மாணவி கொஞ்சம் வருத்தத்துடன் வகுப்பில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறாள். ஆசிரியர் எழுதிக் கொடுத்த ஏபிசிடி பேப்பரை கையில் வைத்துக்கொண்டு வேறு மாதிரி படிக்கத் தொடங்கினார்.


A for 1, B for 2, C for 3, D for 4 என வாய் விட்டுப் படிக்கத் தொடங்க அதற்குள் அவளுடைய தோழியிடம் இருந்து போன் அழைப்பு. ‘என்னடி அந்த ஆள் என்ன காமெடி செய்தார் இன்று’ என்று எகத்தாளமாகக் கேட்ட தோழிக்கு ‘அவர் எவ்வளவு பெரிய புரொஃபசர்… அவரைப் போய் அந்த ஆள் அது இது என்று சொல்கிறாய். நான் நாளைக்கு டெஸ்ட்டுக்கு தயாராகனும்… முதல்ல போனை வை’ என்று சொல்லிவிட்டுப் படிக்கத் தொடங்குகிறாள்.


அடுத்த நாள் மிகச் சரியான நேரத்துக்கு வகுப்புக்குச் செல்கிறாள்.


பேராசிரியர் அவளிடம் ‘தயாராக வந்திருக்கிறாயா? என கேட்டுவிட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்.


’14-வது எழுத்து என்ன?’, ‘19-வது எழுத்து என்ன’ என்ற கேள்விகளுக்கு N, S என சரியாக சொன்னாள், விரல்களைவிட்டு எண்ணாமல் மனக்கணக்கிலேயே.


அவளை பாராட்டிவிட்டு போர்டில் N+S என எழுதி விடை கேட்க 33 என சொல்கிறாள். N^2 + S^2 என்ற கேள்விக்கு சில நொடிகள் மனதில் கணக்கிட்டு 557 என மிகச் சரியாகச் சொல்கிறாள். அடுத்து Y^2 + K – B^2 * g^2 என்ற கேள்விக்கு அவள் தன்னுடைய நோட்டில் எழுதி கணக்கிட்டு 440 என சரியான விடை சொல்கிறாள்.


பேராசிரியர் அவளைப் பாராட்டிவிட்டு ‘நன்றாக புரிந்துகொண்டு செய்கிறாய். ஆனால் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாய்… வீட்டுக்குப் போய் நன்றாக ப்ராக்டிஸ் செய்துவிட்டு நாளைக்கு வா’ என சொல்லி அனுப்புகிறார்.


இப்படியாக அவளுடைய பயிற்சி வகுப்பு, மூன்றாம் நாளைக் கடந்து நான்காவது நாளை அடைகிறது.


அடுத்த நாளும் மிகச் சரியான நேரத்துக்குச் செல்கிறாள். அந்தப் பேராசிரியருக்கு முன் இரண்டு டீ கப்புகள் இருந்தன. அதில் ஒன்றில் டீயை ஊற்றி குடித்தார்.


அவர் போர்டில் Concentrate, Understand, Practice என எழுதிவிட்டு அவளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிக்கிறார். 


‘நீ வகுப்புக்கு வர ஆரம்பித்த இந்த மூன்று நாட்களில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? முதல் நாள் உனக்கு கான்சண்டிரேட் செய்ய சொல்லிக்கொடுத்தேன். அடுத்த நாள் பாடத்தை புரிந்துகொண்டு படிக்கச் சொல்லிக்கொடுத்தேன். மூன்றாவது நாள் உனக்கு பயிற்சி எடுக்க கற்றுக் கொடுத்தேன்.


இன்னிக்கு உன்னால் 10 கேள்விகளுக்கு 6 கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடிந்தது. இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொண்டு கூடுதலாகப் பயிற்சி எடுத்தால் உன்னால் 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்ல முடியும். ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு இவ்வளவுதான்.


எவ்வளவு பேர் பரிட்சை எழுதறாங்க… அதில் எவ்வளவு பேர் பாஸ் செய்யறாங்க என்றெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். தேர்வு ஹாலில் உன் கையில் கேள்வித்தாள். அதில் 90 கேள்விகள். உனக்கு 180 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்படும். ஒரு கேள்விக்கு 2 நிமிடம். அதில் நீ எத்தனை கேள்விக்கு சரியா பதில் சொல்லப் போகிறாய் என்பதுதான் முக்கியம். எல்லா கேள்விகளுமே உன் சப்ஜெக்ட்டில் இருந்துதான் கேட்பார்கள். நீ ஏபிசிடி-தானேன்னு அலட்சியமா இருந்த மாதிரி இல்லாமல், எல்லா பாடங்களையும் நன்றாக கான்சன்டிரேட் செய்து ஆழமாக புரிந்துகொண்டு படிக்கணும். படிச்சதை திரும்பத் திரும்ப பயிற்சி செய்யணும். 


பேராசிரியர் வெற்றிக்கான மந்திரமாக மற்றொரு விஷயத்தையும் சொல்கிறார்.


‘நீ எப்படி டீ குடித்தாய்?’


‘கப்பில்…’


‘ டீயை சுவைக்க ஒரு கப் தேவையாக இருக்கிறதல்லவா, அதுபோல்தான் வெற்றியை சுவைக்கவும் ஒரு கப் உள்ளது. அதுதான் வெற்றிகான மந்திரம்’ என சொல்லி போர்டில் எழுதி இருந்த Concentrate, Understand, Practice என்ற மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்தை வட்டமடித்துக் காட்டி, இந்த CUP தான் வெற்றியை சுவைக்க உதவும் மந்திரம் என சொல்கிறார்.


C- Concentrate – வகுப்பில் கவனமாக இருத்தல்,

U - Understand – பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ளுதல்,

P- Practice – தினந்தோறும் பயிற்சி எடுத்தல்


இதுவே வெற்றியின் மந்திரம் என்று விளக்கம் கொடுத்து நாளை முதல் மாதிரி தேர்வு ஆரம்பம் என சொல்கிறார். இந்த மந்திரத்தை என்றும் மறக்கவே கூடாது என அட்டகாசமாக அறிவுரை சொல்கிறார்.


அந்த மாணவியின் முகத்தில் பரவசம். பேராசிரியரின் அனுமதி பெற்று தான் குடித்த டீ கப்பை வெற்றிக்கான மந்திரமாகக் கருதி தன்னுடன் எடுத்துச் செல்கிறாள்.


இந்த காட்சி ‘கமலி From நடுக்காவேரி’ என்ற திரைப்படத்தில் வருகின்றது.


இந்தக் காட்சியில் சொல்லப்பட்டிருக்கும் ABCD லாஜிக்கும், Tea CUP லாஜிக்கும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு அவசியம் தேவை.. 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Nice information with best example

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Thanks jonah mam, keep in touch..

    ReplyDelete
  5. இன்று போய் நாளை வா

    ReplyDelete
  6. அளப்பரிய அனுபவத்தால் பண்படுத்தி

    அறிவெனும் நல் விதை ஊன்றி

    அன்பெனும் அருவி நீர் பொழிந்து

    கண்டிப்பு எனும் கரியமிலவாயுவை
    ஆயுதமாக்கி

    நற்பண்புகள் எனும் சூரிய ஒளி பரப்பி

    ஆலமர விருட்சமாக அகண்ட இப்பேரண்டத்தில்

    கணக்கிலடங்கா
    தீய சூழ்நிலைகளை கண்டு மனம் துவளாமல்
    காலூன்ற செழித்தோங்க

    அயராது பாடுபட ஆயத்தமாக உள்ள
    அப்பழுக்கற்ற ஆசிரியப்பெருமக்களே

    விடியும் பொற்காலம்
    காத்திரு கடமையாற்ற
    அந்நாள் வெகு தொலைவில் இல்லை
    என நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய ரேவதி சகோதரி அவர்களே ஆசிரியர்கள் பற்றிய மிக சிறந்த கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி.

      Delete
    2. விடியும் பொற்காலம்
      காத்திரு கடமையாற்ற
      அந்நாள் வெகு தொலைவில் இல்லை
      என நம்புவோம் - உண்மையான வரிகள் சகோதரி. அந்த நம்பிக்கை தான் நம்மை வாழ வைத்து கொண்டிருக்கிறது.

      Delete
    3. Very nice thought revathi sister.

      Delete
    4. சூப்பர் கவிதை ஆனா இந்த டெட் அனுபவத்துல ரசிக்க முடில.

      Delete
    5. Thanks saravanan sir and swetha mam

      Delete
    6. Revathi sis..

      Amazing!!!!!
      No words!!!!
      Keep it up❤️

      Delete
  7. விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர்க்கு போட்டித்தேர்வு அமலுக்கு வர போகிறது . அரசு பரிசீலனை.

    ReplyDelete
    Replies
    1. செய்தி உறுதி எனில் எதாவது ஆதாரம் உள்ளதா?

      அல்லது

      நண்பர்,
      உறவினர் வட்டார செய்தியா?
      பதிவிடவும்

      Delete
    2. தகுதி தேர்வு தான் வரும். அனைவரும் அறிந்ததே.

      Delete
  8. தோழி பகிர்ந்தார்.உறுதியான செய்தி தெரியாது

    ReplyDelete
    Replies
    1. Backya mam when syllabus will come

      Delete
    2. If you know anything about that please inform us. Thanks in advance.

      Delete
  9. Bakya madam epa exam varunu ethavathu theriuma

    ReplyDelete
  10. சங்கத்தின் முயற்சிகள் பல சமயங்களில் சங்கடத்தில் முடிந்து விடுகிறது.

    ReplyDelete
  11. 2013 மீது 2017 புகார் சொல்ல,
    2017 மீது 2013 புகார் சொல்ல.
    இப்படித்தான் பல வருடம் போஸ்டிங் யாருக்கும் போடாமல்அரசு உள்ளது.
    2013&2017 இரண்டு gruop ஒன்றாக ஒரே கோரிக்கை வைத்தால் மட்டுமே போஸ்டிங் போட வாய்ப்பு.

    ReplyDelete
  12. ஆம் 2017 தற்போது 2013 தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    ReplyDelete
  13. Trt வர வாய்ப்பில்லை.
    ஆனால்
    2013 & 2017 குரூப் சேர்த்து
    Trt வர வைத்து விடுவார்கள்.

    அவர்அவர்கள் அவங்க வேலைய பார்த்தபோதும் அரசு தன் கடமைய செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு எல்லா வேலையும் நடந்துட்டு இருக்கு

      Delete
  14. கண்டிப்பா நியமன தேர்வு தான் வரப்போகுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here