Skip to main content

FAITHFUL FRIDAY..

 ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.


நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Very nice practical truth admin mam

    ReplyDelete
  3. Admin mam am going through youtube videos of pgtrb so that I can be in touch with trt

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      Hard work never fails, keep trying..

      Delete
  4. Iam also hopefully waiting for TRT

    ReplyDelete
  5. அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 20ஆம் தேதியும் ஜனவரி 2ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டன.
    இவற்றில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல், அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு என்பது கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்து குறிப்பாக வேதியியல் பாடத்திற்காக 121 பின்னடைவு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
    அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிக தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்று பொது பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும் பட்டியலினத்தவர் 5 பேரையும் பொதுப்பிரிவில் சேர்க்காமல் அவரவர் சமூக பிரிவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சேர்த்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு விதிகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீட்டு விதிகளின் படியே புதிய பட்டியலை தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
    இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் இருநபர் நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அதில் வேதியியல் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை பிப்ரவரி மாதமே நிரப்பி பணி ஆணைகளை வழங்கி விட்டோம். எனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பாக ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதிக மதிப்பெண்கள் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த ஆசிரியர்களை பொது பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு பிரிவில் சேர்த்தது தவறு என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான அமர்வு தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Thanks for the update selva sir..

      Delete
    2. தவறான தீர்ப்பு, TRB சீராய்வு மனு போட வேண்டிய கட்டாயம்.

      அங்கேயாவது சரியாய் வாதாடுகிறதா என பார்க்க வேண்டும்..

      Delete
    3. Gud evg admin mam.intha judgement ala upcoming trb exam ku ethavathu pathippu varuma mam.(

      Delete
    4. Ama mam intha exam post poned ahuma ..affect ahuma

      Delete
    5. Affect agathu, athoda year of vacancies vera ithoda year of vacancies vera.. So chances illa..

      Delete
    6. Mm.thank you mam.😀😀😀

      Delete
  6. Ithanal ethavathu benefits for CV candidates

    ReplyDelete
    Replies
    1. இடியாப்ப சிக்கலில் டீஆர்பி

      Delete
    2. இடியாபமோ, இட்லி யோ காத்துட்டு இருக்குற ஆசிரியர்களுக்கு பசி போகுமா, ஏதாவது வாய்ப்பு இருக்கா, அதை சொல்லுங்க...

      Delete
    3. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால் welfare dept BC ஆசிரியர்கள் வெளியே செல்ல வேண்டும்.
      MBC, SC க்கு எந்த பிரச்சனையும் இல்லை..

      Delete
    4. குறைந்த பட்சம் இடஒதுக்கீடு பிரிவில் 32 வேதியியல் பாட நபர்களுக்கு பணியமர்த்த வேண்டும் காலி பணியிடம் ௭ங்கே? ௭ன்ன செய்ய போகிறார்கள்? டெக்னிக்கல் பிரச்சினை ௭ன்று சொல்வது ௭தை மறைப்பதற்காக ? ௮னைத்திற்கும் பதில் சொல்வது யாா்?

      Delete
    5. எதையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது

      Delete
  7. Trb எல்லாத்தையும் தப்பா தான் பண்ணும்

    ReplyDelete
  8. Admin mam 9,10,11th school online class eppo mudiyum mam,....
    Sila school 12 th portion edukurangalam,sila school 11th edukuranga.... 1_8th std varaikum innum class online eduka sd solranga. ....eppo ithu ellam mudiyum, pg trb padikka vidama velaiya vankitae irukanga ,kathal kettan...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here