Skip to main content

தமிழ் மழை..


ஏன் அடைமழை என்கிறோம்?


அடைமழை = வினைத்தொகை!


☆ அடைத்த மழை

☆ அடைக்கின்ற மழை

☆ அடைக்கும் மழை


விடாமல் பெய்வதால், ஊரையே \"அடை\"த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!


கனமழை வேறு! அடைமழை வேறு!

தமிழில், 14 வகையான மழை உண்டு!:)


தமிழில், மழை!


1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆலி

6. சோனை

7. பெயல்

8. புயல்

9. அடை (மழை)

10. கன (மழை)

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளிமழை

14. வருள்மழை


வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!

இயற்கை நுனித்த தமிழ்!


மழ = தமிழில் உரிச்சொல்!

☆ மழ களிறு= இளமையான களிறு

☆ மழவர் = இளைஞர்கள்


அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..

மழை எனும் சொல்! மழ + ஐ


இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!


மழை வேறு/ மாரி வேறு! 

அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!


மழை/மாரி ஒன்றா?


☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!

☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!


மார்+இ= மாரி!

தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!

அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!


தமிழ்மொழி, 

பிறமொழி போல் அல்ல! 

வாழ்வியல் மிக்கது!


அட்டகாசம்...! 


இன்னும் கொஞ்சம்...


1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது


2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..


3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….


☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)

சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….

அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.

சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்

சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்

4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..


அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..

5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்


6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).


7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..


8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..


மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 

(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Super mam enga irunthu edukureenga

    ReplyDelete
  3. Good morning mam and friends 🙏

    ReplyDelete
  4. செம்ம மேடம். மழைக்கு இவ்வளவு விளக்கமா

    ReplyDelete
    Replies
    1. Namma language pathi ipdi therinjukkita dhan undu..

      Delete
  5. Gudmrng Anbu sir, Prema mam and Bala sir.. :)

    ReplyDelete
  6. Mam Tet pass pannavangalku posting poduvangala intha year rempa manna ullichalla iruku pls reply mam

    ReplyDelete
    Replies
    1. Trt vekkama endha method vandhalum problem dhan sir, idhula 2013 vera theva iladha problems create panitu iruku so chances kammi dhan sir..

      Delete
  7. Tet 2013, 2017, 2019க்கு அல்வா

    ReplyDelete
  8. Today thought very nice.I am tamil major.I read very interest.👌

    ReplyDelete
  9. December வந்து விட்டது போஸ்டிங் போடுவதகாக இருந்தால் அமைச்சர் (அண்மையில் )பேட்டி -இல் சொல்லி இருப்பார்.
    போஸ்டிங் போடுவதகாக அறிகுறி இல்லையே.
    Ano mam இந்த முறையும்
    நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுமா ano mam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பாலா அவர்களே இந்த மாதத்திற்குள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும். ஜனவரி பிப்ரவரி இல் கூட பணி நியமனம் நடக்கலாமே. நாம் இப்படியே இலவு காத்த கிளி போல் ஒவ்வொரு மாதமாக அடுத்த மாதம் அடுத்த மாதம் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. என்ன தான் பண்ண போறாங்களோ

      Delete
  10. it is surprise to see, no one talk about TRT, without TRT exam even a single post is appointed for BT & SG.

    ReplyDelete
    Replies
    1. Here everyone says trt will never come

      Delete
    2. Madam neenga trt varrathunu eppadi soldering...its rumour spreading day by day....
      Kandeppa trt irruku

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Sir many are saying not me.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Ano mam please reply😓😓

    ReplyDelete
  13. Ano madam you say what will happen to posting

    ReplyDelete
  14. Mam kandippa posting poda vaippu irukka mam kindly reply me

    ReplyDelete
    Replies
    1. Sir wait pannunga jj death day ethavathu varutha parpom

      Delete
    2. Unknown friend..

      Due to election there is a chance but still 2013 is creating unnecessary issues, so only government also not clear about this..

      Delete
    3. எல்லாம் நம்ம தல எழுத்து

      Delete
    4. ஆமா சார் முன்னாடி அந்த அம்மா பொறந்த நாளுக்கு போஸ்டிங் வரும்னு பாத்தோம் இப்ப செத்த நாள் 🤦🤦🤦🤦

      Delete
    5. ஆனாலும் போஸ்டிங் போடமாற்றனுவ

      Delete
    6. Admin mam enna trb board la erukkanga avangakitta eppo posting poduvaanga ketgiraanga. Avangalukkae eathuvum theriyuthu. Trt exam varum solluvanga but avanga nenaigira mathiri eppavum varaathu. pagal kanavu kaana vendiyathu thaan.

      Delete
    7. நீங்க கூட தான நேத்து வர கேட்டுட்டு இருந்திங்க?? சார் நீங்க எல்லாம் இன்னைக்கு வந்தவங்க அட்மின் மேடம் ஆரம்பத்துல இருந்து கூட வந்தவங்க. எங்க விருப்பம் நாங்க கேக்குறோம். உங்க வேலைய பாருங்க சார்

      Delete
    8. Bala sir she is not dreaming you are only dreaming.

      Delete
    9. Avankalukku theriyathunu neenka ean sir soluriga. Trt varumnu avaga solurathu pagal kanava iruntha neega kuda posting poturuvaganu solitu irukiga inum podalaye athu pagal kanavu ilaya

      Delete
    10. Even if she is not aware she has the guts to say on face that she is unaware..but she will not make assumptions like you mr.bala sir

      Delete
  15. Vino sir..

    Ippo posting pottu yemandhu nikradha vida posting podama irukadhey naladhu dhan..

    ReplyDelete
    Replies
    1. Mmm. இதுவும் கடந்து போகும்....அப்டின்னு sollidaathinga...

      Delete
    2. Admin mam please say when will be posting

      Delete
  16. Trt வரும். Admk மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... Dmk வந்தால் trt வராது... எல்லாம் அரசியல்..😓😓😭😭😭

    ReplyDelete
  17. அரசியல் ஆட்டம் ஆரம்பம்😭😭😭

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here